வேட்டையன் பராக்.. ரஜினிகாந்த்துக்கு லைகா கொட்டிக்கொடுத்த சம்பளம் இத்தனை கோடியா?.. மாஸ் குறையல

சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் வேட்டையன். அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் கடந்த மாதம் பிரமாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் படக்குழுவினர், ரசிகர்கள் கலந்துகொண்டனர். வழக்கம்போல் ரஜினிகாந்த் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தச் சூழலில் ரஜினிகாந்த் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது. அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஞானவேல் முக்கியமான இயக்குநர் என்பதால் இந்தப் படத்தின் மீதான எக்கச்சக்க எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இப்போதிருந்தே எழ ஆரம்பித்திருக்கிறது.

rajinikanth vettaiyan

படம் ரிலீஸ்: படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளியான ஜெயிலர் படம் உலகளவில் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. எனவே இந்தப் படமும் கண்டிப்பாக அந்த அளவுக்கு வசூல் செய்யுமா இல்லை அதனைவிடவும் அதிகம் வசூலித்து கெத்து காட்டுமா என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதேபோல் இப்படத்தில் கமர்ஷியல் கலவை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும், ரசிகர்களும் கலந்துகொண்டார்கள். இந்த ஆடியோ லான்சில், ஒருமுறை ஞானவேலுவிடம் தான் ஒரு கதையை சொன்னதாக கழுதை, டோபி கதையை சொன்னார் ரஜினி. அந்தக் கதையை அவர் சொல்லும்போதும், சொல்லி முடித்தபோதும் ஆடியோ லான்ச் நடந்த ஆடிட்டோரியம் ஆரவாரத்தில் குலுங்கியது. இப்போது அந்தக் கதையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. மேலும் அனிருத் தனது மகன் போன்றவர் என்று ரஜினிகாந்த் கூறியதும் அவரை மட்டுமின்றி ஒட்டுமொத்த படக்குழுவையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ட்ரெய்லர்: ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் ரசிகர்களிடம் பெரிதான வரவேற்பு இல்லை. இதனையடுத்து சமீபத்தில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதனைப் பார்த்த ரசிகர்கள் டீசருக்கு ட்ரெய்லர் பரவாயில்லை என்கிற ரீதியிலேயே கூறினார்கள். இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட் என்றே தெரிகிறது. மேலும் படத்தின் மீதான ஹைப்பும் கொஞ்சம் குறைந்திருப்பதாகவும் ஒரு பேச்சு திரைத்துறையில் எழ ஆரம்பித்திருக்கிறது.

ரஜினிக்கு சம்பளம்: இந்நிலையில் படத்தில் ரஜினிகாந்த் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சம்பளமாக 125 கோடி ரூபாயை கொடுத்திருக்கும் லைகா நிறுவனம்; படத்தில் வரும் லாபத்திலும் குறிப்பிட்ட அளவை ரஜினிக்கு கொடுக்க ஒத்துக்கொண்டிருப்பதாக பேசப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் படத்தில் கண்டிப்பாக லாபம் கிடைக்கும். அதில் குறிப்பிட்ட அளவு போனால் வேட்டையன் படத்துக்கு ரஜினியின் சம்பளம் 200 கோடியை தொடுகிறதே என்று கணக்கிட்டு ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X