மகள் படத்தில் நடிக்கவே இவ்வளவு சம்பளமா?.. ரஜினி குறித்து தீயாய் பரவும் தகவல்
சென்னை: தனது மகளான ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்கு ரஜினி வாங்கியிருக்கும் சம்பளமாக கூறப்படும் தொகை கோலிவுட்டை வாய் பிளக்க வைத்துள்ளது.
இந்திய சினிமாவின் முகமாக ரஜினிகாந்த் இப்போதுவரை நம்பர் 1 இடத்தில் இருந்துவருகிறார். பலர் திரைத்துறைக்கு வந்தாலும் ரஜினியின் இடம் ரஜினிக்குதான் என்ற நிலை நீடிக்கிறது. வயதானாலும் சுறுசுறுப்பும், கலை மீது ஆர்வமும் சிறிதும் குறையாமல் திரைப்படங்களில் நடித்துவருகிறார் ரஜினி.

அண்ணாத்த கொடுத்த அடி
ஆனால் சமீபமாக ரஜினிக்கு போதாதக்காலமாக இருக்கிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த தர்பார், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்தன. இதனால் உடனடியாக ஒரு ஹிட் கொடுத்தாக வேண்டுமென முனைப்போடு இருக்கிறார் ரஜினிகாந்த்.

நெல்சனுடன் ஜெயிலரான ரஜினிகாந்த்
எனவே, இளம் இயக்குநருடன் கைகோர்க்க முடிவு செய்த ரஜினிகாந்த் டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களின் இயக்குநரான நெல்சன் திலீப்குமாருடன் இணைந்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் படமானது தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இதற்கிடையே ரஜினியின் மூத்த மகளும் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களின் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துவருகிறார். இப்படத்துக்கான பூஜை கடந்த வருடம் சென்னையில் நடந்தது.

கேமியோ ரோலில் ரஜினிகாந்த்
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. தனுஷுடனான பிரிவிற்கு பிறகு மிகுந்த வருத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா இனி வேலைகளில் கவனம் செலுத்த வேண்டுமெனவும், அதற்கு தான் பக்கபலமாக இருக்க ரஜினி முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 3 படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. வை ராஜா வை வசூல், விமர்சனம் என இரண்டு வகையிலும் வரவேற்பைப் பெறவில்லை.
எனவே இந்தப் படமும் முதல் இரண்டு படங்கள் போல் இருந்தால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அதனால்தான் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து தன்னால் முடிந்த அளவு படத்துக்கு ப்ரோமோஷன் செய்ய ரஜினி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

ஆத்தாடி ஒரு வாரத்துக்கு இவ்வளவு சம்பளமா?
இந்நிலையில் லால் சலாம் படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் ஒரு வாரம் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். அந்த ஒரு வாரத்திற்கு ரஜினிக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது. இந்த டாக்கை கேட்டு ஒட்டுமொத்த திரையுலகும் வாய் பிளந்து நிற்கிறது என்கின்றனர் கோலிவுட்டினர்.

லைகாவுடன் தொடர் கமிட்மெண்ட்டில் ரஜினிகாந்த்
லைகாவுக்கும், ரஜினிக்கும் எப்போதும் சுமூகமான உறவே நீடித்துவருகிறது. லால் சலாம் படம் மட்டுமின்றி ஜெயிலரை முடித்துவிட்டு ரஜினி அடுத்த படம் லைகா நிறுவனத்திற்குத்தான் நடிக்கப்போகிறார். இந்தப் படத்தை லவ் டுடே இயக்குநர் ப்ரதீப்போ இல்லை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேலோ இயக்கலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











