அந்த கேள்வியை மட்டும் கேட்காதீங்க.. திடீரென சந்திரமுகியாக மாறிய வேட்டையன்.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், சென்னைக்குத் திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த செய்தியாளர்கள் அவரிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்டவுடனே சட்டென கோபமடைந்து விட்டார் ரஜினிகாந்த்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு ஏகப்பட்ட தமிழ்நாட்டு ரசிகர்களின் அன்பை பெற்றுள்ள ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்திருந்தார். பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பிப்பார் என அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் காத்திருந்தனர்.

vettaiyan rajinikanth politics


கடைசியாக உடல்நலக்குறைவு காரணமாக அரசியலுக்கு இனிமேல் வரவே மாட்டேன் என உறுதியாக சொல்லி விட்டார் ரஜினிகாந்த்.

வேட்டையன் ஆடியோ லாஞ்ச்: சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. வெளி ஊரில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் அதற்காக இன்று காலை சென்னை வந்தடைந்தார். அவரிடம் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க போகின்றனர் என்கிற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் அதெல்லாம் எனக்கு தெரியவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதை கவனித்துக் கொள்வார்கள் என்றார்.

வேட்டையன் படம் எப்படி வந்திருக்கு?: வரும் அக்டோபர் 10ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில், அந்த படம் எப்படி வந்திருக்கு என்கிற கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் படம் ரொம்ப சூப்பரா வந்திருக்கு, நல்லா இருக்கு என்றார்.

சந்திரமுகியான வேட்டையன்: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதாக பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில், அது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. உடனே டென்ஷனான ரஜினிகாந்த் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன் என பத்திரிகையாளர்களை கண்டித்து விட்டு அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார் ரஜினிகாந்த்.

விமான நிலையம் பிஸி: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி உள்ளிட்ட பிரபலங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து வரவுள்ள நிலையில், இன்று சென்னை விமான நிலையமே களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X