வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. உச்சக்கட்ட அப்செட்டில் ரஜினிகாந்த்?.. அப்படி என்ன ஆச்சு?

சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் வேட்டையன். அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் நேற்று முன் தினம் பிரமாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் படக்குழுவினர், ரசிகர்கள் கலந்துகொண்டனர். வழக்கம்போல் ரஜினிகாந்த் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தச் சூழலில் ஆடியோ லான்ச்சில் நடந்த ஒரு விஷயம் அவரை அப்செட் ஆக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது. அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஞானவேல் முக்கியமான இயக்குநர் என்பதால் இந்தப் படத்தின் மீதான எக்கச்சக்க எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இப்போதிருந்தே எழ ஆரம்பித்திருக்கிறது.

vettaiyan rajinikanth

படம் ரிலீஸ்: படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளியான ஜெயிலர் படம் உலகளவில் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. எனவே இந்தப் படமும் கண்டிப்பாக அந்த அளவுக்கு வசூல் செய்யுமா இல்லை அதனைவிடவும் அதிகம் வசூலித்து கெத்து காட்டுமா என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதேபோல் இப்படத்தில் கமர்ஷியல் கலவை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் டீசர்: படத்தின் ஆடியோ வெளியீட்டு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும், ரசிகர்களும் கலந்துகொண்டார்கள். ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தில் டீசர் வெளியிடப்பட்டது. அதனைப் பார்த்த ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் பொதுவான ரசிகர்கள் ஞானவேலுவும் கமர்ஷியல் ஷட்டருக்குள் சிக்கிக்கொண்டாரோ என்ற கேள்வியை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி டீசருக்கு அவர்கள் கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர்.

ரஜினி சொன்ன குட்டி கதை: ஆடியோ லான்ச் என்றாலே ரஜினிகாந்த் ஒரு குட்டி ஸ்டோரி சொல்வது வழக்கம்தான். அந்தவகையில் இதிலும் ஞானவேலுவிடம் தான் ஒரு கதையை சொன்னதாக கழுதை, டோபி கதையை சொன்னார். அந்தக் கதையை அவர் சொல்லும்போதும், சொல்லி முடித்தபோதும் ஆடியோ லான்ச் நடந்த ஆடிட்டோரியம் ஆரவாரத்தில் குலுங்கியது. இப்போது அந்தக் கதையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. மேலும் அனிருத் தனது மகன் போன்றவர் என்று ரஜினிகாந்த் கூறியதும் அவரை மட்டுமின்றி ஒட்டுமொத்த படக்குழுவையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அப்செட்டில் ரஜினி?: இப்படி வேட்டையன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்வு ரஜினிக்கு நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அதேசமயம் ஒரு கரும்புள்ளி போல் நடந்த சம்பவம் ஒன்று அவரை அப்செட் ஆக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாகவும்; அதனை ரசிகர்கள் பலர் வாங்கினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் விழா நடந்த ஆடிட்டோரியத்தில் போதுமான இடம் இல்லை என்பதால் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் வெளியே நிற்கும் சூழல் உருவானதாகவும்; இது ரஜினியின் காதுகளுக்கு சென்றதை அடுத்து; தன்னுடைய ரசிகர்கள் இப்படி கஷ்டப்பட்டுவிட்டார்களே என்று வருத்தப்பட்டதாகவும் திரைத்துறையிலிருந்து குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X