ரஜினி முதல் கவுண்டமணி வரை.. அர்ஜுன் மகளின் ரிஷப்ஷன்.. திரண்டுவந்து வாழ்த்திய பிரபலங்கள்!

சென்னை: நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் கடந்த 10ம் தேதி சென்னை கெருகம்பாக்கத்தில் அர்ஜுன் கட்டிய அஞ்சநேயகர் கோவிலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் இவர்களின் ரிஷப்ஷன் நிகழ்ச்சி கடந்த 15ந் தேதி நடைபெற்றது. அதன் வரவேற்பு போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று பார்க்கலாம்.

வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி நடித்து வருகிறார் நடிகர் அர்ஜுன் . தளபதி விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்தமான நடிகராக மாறிவிட்டார் அர்ஜுன். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் விஷாலின் பட்டத்து யானை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்த படத்தைத் தொடர்ந்து சொல்லிவிடவா என்ற படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார். நடிகர் உமாபதி, அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியர் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Arjun Aishwarya Uma pathy Rajini

ஐஸ்வர்யாவும் நகைச்சுவை தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்துவந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையாவுக்கு தெறிய வர, இருவரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர். இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Arjun Aishwarya Uma pathy Rajini

பிரம்மாண்ட திருமணம்: இதையடுத்து, கடந்த ஜூன்10 ஆம் தேதி சென்னையில் நடிகர் அர்ஜுன் கட்டியிருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை சென்னை லீலா பேலசில் வரவேற்பு நடைபெற்றது. அதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து பாஜக அண்ணாமலை, ஜிகே வாசன், அன்புமணி ராமதாஸ், சீமான், டிடிவி தினகரன் என பல அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Arjun Aishwarya Uma pathy Rajini

திரைப்பிரபலங்கள்: தற்போது இவர்களின் திருமண வரவேற்பு போட்டோஸ் இணையத்தில் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். நடிகர் பிரபுதேவா, சிவகார்த்திகேயன், குஷ்பு சுந்தர், சினேகா, பிரசன்னா, இயக்குநர் ஷங்கர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கவுண்டமணி, விஜய் சேதுபதி, ஷாலினி தனது மகளுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X