கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் ரஜினி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார்.
பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழா நடக்கும். இந்த ஆண்டுக்கான விழா இன்று துவங்குகிறது. இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா பச்சனுடன் கலந்து கொள்கிறார். அவர் சிவப்புக் கம்பளத்தில் மகளுடன் நடக்கவிருக்கிறார். படப்பிடிப்பு இருப்பதால் அபிஷேக் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து யார், யார் கலந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம்...

ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் கோச்சடையான் பட டீசர் இந்த திரைப்பட விழாவில் ரிலீஸாகலாம் என்று கூறப்படுகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.

அமிதாப் பச்சன்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ஹாலிவுட் படமான தி கிரேட் கேட்ஸ்பி திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் பச்சன்
ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார். அவர் பல ஆண்டுகளாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்யா பாலன்
வித்யா பாலன் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் ஒருவராக உள்ளார்.

அமீஷா பட்டேல்
ஷார்ட்கட் ரோமியோ படத்தின் பிரீமியரில் இந்தி நடிகை அமீஷா பட்டேல், நடிகர் நீல் நிதின் முகேஷ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஷெர்லின் சோப்ரா
ஷெர்லின் சோப்ரா நடித்துள்ள காமசூத்ரா 3டி படம் திரையிடப்படுகிறது.

சோனம் கபூர்
லாரியல் பாரீஸின் பிராண்ட் அம்பாசிடராக சோனம் கபூர் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார்.

கரண் ஜோஹார்
பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கரண் ஜோஹார் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார்.

திபாகர் பானர்ஜி
பாலிவுட் இயக்குனர் திபாகர் பானர்ஜியும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார்.

ஜோயா அக்தர்
இயக்குனர் ஜோயா அக்தரும் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார்.

அனுராக் கஷ்யப்
இயக்குனர் அனுராக் கஷ்யப் இரண்டாவது முறையாக இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.

ஃப்ரீடா பின்டோ
நடிகை ப்ரீடா பின்டோ கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார்.

நவாஸுத்தீன் சித்திக்கி
நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கியும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











