வீட்டிலேயே சிஸ்டம் சரியில்லையே.. லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டும் ரஜினி பேரன்.. குட்டி டிடிஎஃப்பா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பேரனும் நடிகர் தனுஷின் மகனுமான யாத்ரா 16 வயதிலேயே பைக் ஓட்டும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளன.

தாத்தா, அம்மா, அப்பா எல்லாமே சினிமாவில் பிசியாகி உள்ள நிலையில், குட்டி டிடிஎஃப் ஆக போயஸ் கார்டனில் வலம் வருகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

Rajinikanth grandson and Dhanush son Yatra driving bike without license stirs controversy

வயசு பசங்க இப்படி வீட்டின் அருகே பைக் ஓட்டி பழகுவதில் எந்த தவறும் இல்லையே என தனுஷ் ரசிகர்களும் கமெண்ட் போட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ்: அண்ணன் செல்வராகவன் கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் தனுஷ். அடுத்து அண்ணன் செல்வராகவன் எழுதி இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் நடித்த தனுஷ் திருடா திருடி படத்தின் மூலம் கமர்ஷியல் ஹீரோவாக உருவானார். புதுப்பேட்டை முதல் நானே வருவேன் வரை இப்போதும் அண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துக் கொண்டு 17 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கருத்து மோதல் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். ஆனாலும், தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவை தொடர்ந்து கவனித்துக் கொள்கிறார் தனுஷ். அம்மாவிடம் வளர்ந்து வந்தாலும், அப்பாவையும் அடிக்கடி சந்தித்தும் அவருடன் நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகின்றனர்.

Rajinikanth grandson and Dhanush son Yatra driving bike without license stirs controversy

லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டிய யாத்ரா: இந்நிலையில், தனுஷின் மகனும் ரஜினிகாந்தின் பேரனுமான யாத்ரா லைசென்ஸ் இல்லாமல் 16 வயதிலேயே போயஸ் கார்டனில் பைக் ஓட்டி வருவதாக புகைப்படங்களை ஷேர் செய்து சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.

குட்டி டிடிஎஃப்: சாலை விதிகளை மீறி பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தி தற்போது வாகனத்தை ஓட்டவே முடியாத அளவுக்கு டிடிஎஃப் வாசன் கஷ்டப்பட்டு வரும் நிலையில், குட்டி டிடிஎஃப் ஆக யாத்ரா மாறி வருகிறாரா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அம்மா ரொம்ப பிஸி: அப்பா ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் படத்தை இயக்கி உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களை கவனித்துக் கொள்கிறாரா? என்கிற கேள்வியும் எழுகிறது. லால் சலாம் படத்தின் ரிலீஸ் பிசியில் அவர் இருந்து வருவதாகவும் விலையுயர்ந்த பைக்குகளை இப்போதே மகன்களுக்கு வாங்கி கொடுத்த நிலையில், ஹெல்மட் கூட போடாமல் ஓட்டிப் பழகுவது ரொம்பவே ஆபத்தான விஷயம் என நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X