முத்து படத்தின் ஹீரோ பத்தி “முத்துமுத்தா” அஞ்சு விஷயம்!

சென்னை: ரஜினி குறித்து சொல்ல நிறைய இருக்கிறது. சொல்லிக் கொண்டே இருக்கலாம். அவரது வயதின் எண்ணிக்கையைப் போல பல மடங்கு அதிக மேட்டர் இருக்கவும் செய்கிறது.

படத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி அவர் தொட்டாலே பொன்னாகும் என்ற கருத்துதான் எங்கும் நிலவி வருகின்றது.

ஆனால் அதிலிருந்து ஐந்தே ஐந்து முத்துக்கள்....! உங்களுக்காக...

லிங்காதான் முதல் படம்:

லிங்காதான் முதல் படம்:

அவரது பிறந்த நாளன்று வெளியான முதல் ரஜினி படம் இதுதான். 40 ஆண்டு கால வரலாற்றில் ரஜினி நடித்த படம் ஒன்று அவரது பிறந்த நாளில் இதுவரை வெளியானதே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

தாய்மொழியில் நடிக்கவே இல்லை:

தாய்மொழியில் நடிக்கவே இல்லை:

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார் ரஜினி. ஆனால் தனது தாய் மொழியான மராத்தியில் ஒரு படத்தில் கூட அவர் நடித்ததில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

சின்னசின்னதாய் நிறைய வேலைகள்:

சின்னசின்னதாய் நிறைய வேலைகள்:

நடிகராவதற்கு முன்பு அவர் பார்க்காத வேலையே இல்லை. சின்னச் சின்ன வேலைகள் பலவற்றை அவர் செய்துள்ளார். கடைசியாக பஸ் கண்டக்டராக இருந்தார். அதன் பின்னர் அவர் நடிகரானார்.

கமல்னா ரஜினிக்கு உயிர்:

கமல்னா ரஜினிக்கு உயிர்:

ரஜினிக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் தெரியுமா.. சாட்சாத் கமல்ஹாசன்தான். அதை அவரே பல இடங்களில் சொல்லியுள்ளார்.. ஏன் அவரது பல படங்களிலும் கூட கூறியுள்ளார். அதேசமயம், கமல்ஹாசனின் பல படங்களில் அவருக்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.

ஜாக்கிசானுக்கு அடுத்து:

ஜாக்கிசானுக்கு அடுத்து:

சிவாஜி படத்தின் வெற்றியின் மூலம் ஆசியாவிலேயே அதிக சம்பவளம் வாங்கும் 2 ஆவது நடிகராக உயர்ந்தார் ரஜினி. முதலிடத்தில் ஜாக்கி சான் இருக்கிறார்.

உனக்கு சாவே கிடையாது:

உனக்கு சாவே கிடையாது:

இதுவரை ரஜினி நடித்த எந்தப் படத்திலும் அவர் இறப்பது போல காட்சி வைத்ததில்லை. அப்படியே வைத்தாலும் கூட அவர் மறு பிறவி எடுப்பதாக காட்டி விடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X