குடும்பத்துடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி.. ஐஸ்வர்யா மிஸ்ஸிங்.. மீண்டும் குழப்பமா?
சென்னை : மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து முடிவால் தனிமையிலே நேரத்தை செலவிட்டு வந்த ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்குப்பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா இன்று அவருடன் வரவில்லை. லதா மற்றும் இளைய மகள் சௌந்தர்யா மட்டுமே உடன் இருந்தனர்.
இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் தற்போது தீயாக பரவி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. அதோடு இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் திருவிழா போன்று அலைமோதும்.

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரியவுள்ளதாக அண்மையில் அறிவித்தனர். தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டதாக இருவரும் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகளின் விவாகரத்து முடிவை ரஜினி சிறிதும் விரும்பவில்லையாம். குழந்தைகளின் நலனுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது ரஜினியின் விருப்பமாக உள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு முழுமையாக தனிமையிலேயே தன்னுடைய நேரத்தை செலவிட்டு வந்தார் ரஜினி. தனக்கு மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே பேசி வந்த ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹோட்டல் திறப்புவிழாவில் கலந்து கொண்டுள்ளார். தனது மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டியுடன் காணப்பட்டார்.

ரஜினியுடன் ஐஸ்வர்யா இல்லை
ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் பிரிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் , ஊடகத்தை தவிர்த்தார். ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சி என்றாலும் அவருடன் இருக்கும் ஐஸ்வர்யா இன்று அவருடன் வரவில்லை. விவகாரத்து குறித்து கேள்வி எழும் என்பதால் தான் ஐஸ்வர்யா இதில் கலந்து கொள்வதை தவிர்த்து இருப்பார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications