Saroja Devi Passed Away - மனம் கவர்ந்த மாபெரும் நடிகை.. சரோஜா தேவி உயிரிழப்பு.. ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை: கன்னடத்து பைங்கிளி என்று கொண்டாடப்பட்ட சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரைத்துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்துவரும் நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சரோஜா தேவிக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகாவில் பிறந்த அந்த மாநில திரைத்துறையில் நடிகையாக அறிமுகமான சரோஜா தேவிக்கு தங்க மலை ரகசியம் திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வெளிச்சத்தை கொடுத்தது. சிவாஜி கணேசன் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதன் காரணமாக அவருக்கு கோலிவுட்டில் வரிசையாக வாய்ப்புகள் வந்தன. ஒருகட்டத்தில் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைவிடவும் இங்கு பயங்கர பிஸியானார்.

முன்னணி ஹீரோக்களுடன்: சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் என அந்தக் காலத்தில் டாப்பில் இருந்த ஹீரோக்களுடன் வரிசையாக நடித்த அவர்; சிவாஜி, எம்ஜிஆருடன் மட்டும் முறையே 22, 26 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் ஹிட்டாக அமைந்திருந்தன. இதனால் அவரை ரசிகர்களும், திரைத்துறையினரும் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தார்கள்.

Rajinikanth has expressed his condolences on the death of Saroja Devi

அபிநய சரஸ்வதி: தமிழ், கன்னடம், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி மொழியிலும் நடித்து கலக்கிய அவர் இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார். அவரை அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என புகழ்வார்கள் ரசிகர்கள். முக்கியமாக சரோஜா தேவி போன்று யாராலும் முக பாவனைகளை செய்ய முடியாது என்ற கருத்தும் ரசிகர்களில் பெரும்பாலானோரிடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த சரோஜா தேவி: ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் நின்றுபோனதைத் தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து; ஆதவன் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு ஒட்டுமொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு பெங்களூரிவில் வசித்துவந்தார். அவருக்கு சில காலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த சூழலில்; இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர். அவருக்கு வயது 87.

ரஜினிகாந்த் இரங்கல்: சரோஜா தேவியின் உயிரிழப்பு திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில், "பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்." என்று குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் நடிகர்களில் முதல் ஆளாக ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X