ரசிகர் எழுப்பிய கேள்வி… நெகிழ்ந்துப் போன ரஜினி… சொந்த ஊரில் பெற்றோருக்கு மரியாதை
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரசிகரின் கேள்வியால் மனம் நெகிழ்ந்துப்போன ரஜினிகாந்த், இப்போது புதிய முடிவெடுத்துள்ளார்.

ரஜினியின் ஜெயிலர்
ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனது ரசிகர் ஒருவரின் கேள்வியால் மனம் நெகிழ்ந்துப்போன ரஜினிகாந்த், சொந்த ஊரில் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்துள்ளார்.

ரசிகர்களுடன் சந்திப்பு
இந்நிலையில், ரஜினி கடந்த 2008ம் ஆண்டில் ராகேவேந்திரா மண்டபத்தில் வைத்து ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர் ஒருவர் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் உங்கள் சொந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் தாய் தந்தையர்க்கு நினைவு மண்டபம் கட்டுவீர்களா? என்று கேட்டிருந்தார். உடனடியாக கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திகேயன் என்று அந்த ரசிகரை தனது வீட்டிற்கு வரவைத்து, நாச்சிக்குப்பத்தின் தற்போதைய நிலவரத்தை கேட்டுத் தெரிந்துகொண்டதோடு, கிருஷ்ணகிரி மன்றத்தில் முக்கிய பொறுப்பும் கொடுத்து அழகுப் பார்த்தார். பின்னர் தன்னுடைய அம்மா ரமாபாய், தந்தை ராமோஜி ராவ் பிறந்த வீட்டின் தற்போதைய சூழலை தனது அண்ணன் சத்யநாராயணாவை அனுப்பி பார்க்க வைத்தார். ரஜினியின் பூர்வீக வீட்டில் இப்போது ரஜினியின் மாமா துக்காராம், அத்தை சரஸ்வதிபாய் ஆகியோர் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கிராம மக்களுக்கு தண்ணீர் வசதி
ரஜினியின் பூர்விக வீட்டருகே இருந்த அவரது தோட்டத்தில், தண்ணீர் தொட்டியை அமைத்து கிராம மக்களின் விவசாயத்துக்கு பயன்படும்படி ஏற்பாடு செய்துகொடுத்துள்ளாராம். அதோடு தனது ரசிகர் கார்த்திகேயனிடமே அந்த இடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ரஜினி கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ரஜினியின் தாய் தந்தையர்க்கு சிலை அமைக்கும் பணிக்காக அந்த இடம் தூய்மை செய்யப்பட்டு பணிகள் நடந்துள்ளன.

அம்மா, அப்பாவுக்கு சிலை
இதனையடுத்து தோட்டத்துப் பகுதியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சிறிய மேடை அமைத்து அதன் மீது ஒரு பீடமும் அமைக்கப்பட்டுள்ளது/ அதில், தற்போது ரஜினியின் அம்மா ரமாபாய், அப்பா ராமோஜி ராவ் இருவருக்கும் மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், பெற்றோர் வசித்த பழைய வீடு இடிக்கப்பட்டு, அங்கு நினைவு மண்டபம் அமைக்க ரஜினி திட்டமிட்டுள்ளாராம். அதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதனை பார்வையிட ரஜினி அங்கு செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











