ரஜினி, இதெல்லாம் நடிச்சு முடிப்பதற்குள் சட்டசபை தேர்தலே வந்துடுமே
Recommended Video
சென்னை: ரஜினி கண்டிப்பாக அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்று பேசத் துவங்கிவிட்டனர்.
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ரஜினிக்கு புதிதாக ஒரு ஆசை ஏற்பட்டுள்ளதாம்.

ரஜினி
ரஜினிக்கு முழு நீள காமெடி படத்தில் நடித்து ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்க ஆசையாக உள்ளதாம். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ரஜினியை மும்பையில் சந்தித்து பேசியுள்ளார். விக்கி, ரஜினி சேர்ந்து படம் பண்ணினால் அது காமெடி படமாக இருக்குமாம்.

கூட்டணி
மும்பைக்கு கிளம்பும் முன்பு ரஜினிகாந்தை இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் சந்தித்து பேசினார். தர்பார் படத்தை அடுத்து ரஜினி, ரவிக்குமார் கூட்டணி படம் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ்
ரஜினி ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். மேலும் மீண்டும் கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறாராம். ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் திட்டமும் வைத்துள்ளாராம் ரஜினி.

கட்சி
2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தல் தான் ரஜினியின் இலக்கு. ஆனால் அவர் அடுத்தடுத்து போடும் திட்டங்களை பார்த்தால் அவர் கட்சி துவங்குவது போன்று தெரியவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவார், ஆனால் வரமாட்டார் என்று பேசத் துவங்கிவிட்டனர். வர மாட்டேன் என்று நினைத்தாயோ என்று கடைசி நேரத்தில் வந்துவிடுவார் பாஸ்.


Click it and Unblock the Notifications











