Thalaivar 170: தலைவர் 170 தாறுமாறு அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்.. Code word accepted!

சென்னை: ஜெய்பீம் இயக்குநர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 170 படம் நாளை ஷூட்டிங் ஆரம்பிக்கிறது. அதற்காக கிளம்பி விமான நிலையத்திற்கு ரஜினிகாந்த் வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜெயிலர் படத்தின் வெற்றி மற்றும் தலைவர் 170, தலைவர் 171 உள்ளிட்ட படங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரஜினிகாந்த் நச்சென பதில் அளித்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

Rajinikanth headed towards to Thalaivar 170 shooting and reveals about the movie theme

அப்டேட் அக்டோபர்: இந்த அக்டோபர் மாதமே அப்டேட் மாதமாக மாறியுள்ளது. ஒரு பக்கம் இந்த மாதம் வெளியாக உள்ள லியோ படத்தின் அப்டேட்கள் வரிசை கட்டி வரும் நிலையில், அதற்கு போட்டியாக ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் அப்டேட்டும் அக்டோபர் 1ம் தேதி முதல் வரத் தொடங்கி உள்ளன.

இதுவரை தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட நடிகர்கள் தேர்வாகி உள்ள அப்டேட் மற்றும் இந்த படத்திற்கும் அனிருத் தான் இசை என்கிற அப்டேட்டும் வந்துள்ளது.

Rajinikanth headed towards to Thalaivar 170 shooting and reveals about the movie theme

தலைவர் 170 ஷூட்டிங்: அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு அக்டோபர் 4ல் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாத லைகா நிறுவனம் நாளை தொடங்கவுள்ள தலைவர் 170 படம் குறித்த டீம் மற்றும் காஸ்டிங் அப்டேட்டை வெளியிட்டது.

இந்நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் வெளி மாநிலத்துக்கு புறப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

எதிர்பார்க்காத வெற்றி: பீஸ்ட் படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை எப்படி பார்க்குறீங்க என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இது எதிர்பார்த்ததற்கும் அதிகமான வெற்றியை ஜெயிலர் கொடுத்தது என்றார்.

தலைவர் 170 அப்டேட்: மேலும், தலைவர் 170 படம் பண்றீங்க, தலைவர் 171 படம் பண்றீங்க அந்த படங்கள் குறித்த அப்டேட் சொல்லுங்க என கேட்கப்பட்ட நிலையில், இப்போதைக்கு ஞானவேல் ராஜா இயக்கத்தில் தலைவர் 170 படம் தான் முதல்ல பண்றோம். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கல, நாளைக்கு ஷூட்டிங் ஆரம்பிக்குது, அதுக்குத்தான் போயிட்டு இருக்கேன். இந்த படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட படமாக வெளியாகும் என்றார்.

கோட் வேர்ட்: தலைவர் 170 கருத்துள்ள பிரம்மாண்ட படம் என சூப்பர்ஸ்டார் சொன்ன நிலையில், அடுத்த வேட்டைக்கு ரெடியாகி விட்டார். விருதுகள் மட்டுமின்றி வசூல் வேட்டையும் நடத்தும் பிரம்மாண்டமான படமாக இருக்கும் எனக்கூறியுள்ளார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X