Rajinikanth: கூலி பட பஞ்சாயத்து ஓவர் போலயே.. மீட்டிங்கைப் போட்ட இளையராஜா ரஜினிகாந்த்.. விபரம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில வாரங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது. கூலி படத்தின் அறிவிப்பு வெளியாகும் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏற்கனவே வெளியான தங்க மகன் படத்தில் இடம்பெற்றிருந்த வா வா பக்கம் வா என்ற பாடலின் வரிகளும் இடம்பெற்றது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது இளையராஜா மற்றும் ரஜினிகாந்த் சந்தித்து பேசி உள்ளது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. அது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

இளையராஜாவை பொருத்தவரை சுமார் 1200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இதில் இவரது ஆரம்ப காலகட்டங்களில் பல படங்களுக்கு ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ளாமல் பாடல்களும் பின்னணி இசையும் அமைத்து கொடுத்துள்ளார். அதேபோல் தற்போது வருகின்ற இளைய தலைமுறை இசையமைப்பாளர்களாகட்டும் அல்லது இளையராஜாவுக்கு அடுத்ததாக தமிழ் திரை உலகில் வந்த இசையமைப்பாளர்களாகட்டும் தங்களது பாடல்களுக்கான காப்புரிமை விஷயத்தில் சரியாக நடந்து கொண்டனர். அப்படி இருக்கும்போது இளையராஜா இப்படியான விஷயங்களில் தொடக்கத்தில் கவனம் செலுத்தவில்லை. பல படங்களின் பாடல்களின் காப்புரிமை அவரிடம் இல்லாமல் உள்ளது.

rajinikanth ilayaraaja coolie

சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்றிருந்த குணா படத்தின் பாடலான கண்மணி அன்போடு காதலன் பாடல் அந்தப் படத்தை தமிழ்நாட்டில் மெகா ஹிட் படமாக மாற்ற காரணமாக அமைந்தது. பாடலுக்கான உரிமையை இளையராஜாவிடம் பெறாமல் வேறு ஏதோ ஒரு மூன்றாவது நிறுவனத்திடம் இருந்து பெற்று படக்குழு பயன்படுத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருக்கு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஏற்கனவே இளையராஜா தனது பாடல்கள் மூலம் எந்த வகையில் வருமானம் ஈட்டினாலும் அதிலிருந்து தனக்கான காப்பீட்டு தொகை நிச்சயம் தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு வாங்கியிருந்தார். இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தின் அறிவிப்பு வரும் போது தங்க மகன் படத்தில் இடம்பெற்றிருந்த வா வா பக்கம் வா பாடல் இடம் பெற்றது. மேலும் இந்த பாடல் கூலி படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் மத்தியில் மிக எளிமையாக கொண்டு செல்ல ஒரு காரணமாக அமைந்தது.

rajinikanth ilayaraaja coolie

நோட்டீஸ்: இதனால் படக்குழுவுக்கு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் தனது அனுமதி பெறாமல் தனது பாடலை பயன்படுத்தியதற்காக காப்புரிமை மற்றும் நஷ்ட ஈடு தொடர்பாக நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான தகவல்கள் வெளியான போது திரைத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி கிளம்பியது. கூலி படத்தின் அறிவிப்பு வரும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது இது தொடர்பாக ரஜினிகாந்த் இடம் கேள்வி கேட்கப்பட்டது.

rajinikanth ilayaraaja coolie

கூலி பட பிரச்னை: அதாவது கூலி படத்தில் அறிவிப்பில் பயன்படுத்தப்பட்ட வா வா பக்கம் வா பாடலுக்காக இளையராஜா காப்புரிமை நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக கேள்வி கேட்டதற்கு, ரஜினிகாந்த் இந்த விஷயம் இளையராஜா மற்றும் கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையில் ஆனது. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனை அவர்களே பேசி தீர்த்துக் கொள்வார்கள் என பதிலளித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு பதில் அளித்தது சிலருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

rajinikanth ilayaraaja coolie

பிரச்னை ஓவர்: இப்படியான நிலையில் இன்று அதாவது டிசம்பர் மூன்றாம் தேதி ட்விட்டர் பக்கத்தில் இளையராஜா மற்றும் ரஜினிகாந்த் சந்தித்தது தொடர்பான புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது. இன்னும் சொல்லப் போனால் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனைப் பார்த்து ரசிகர்கள் கூலி படத்தின் காப்புரிமை பிரச்சனை எல்லாம் முடிந்தது போல அதனால் தான் இருவரும் சந்தித்து பேசி உள்ளார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் வரும் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வருகின்றது. இது அவரது 74 ஆவது பிறந்தநாள் ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X