லைகா தயாரிப்பு ஒரு படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினிகாந்த்?..விஷ்ணு விஷால், விக்ரந்த்..ஐஸ்வர்யா கூட்டணி

நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக கவுரவ வேடத்தில் நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.

படத்தை இயக்குபவர் ரஜினியின் மகள் என்பதால் அப்படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் கால்ஷீட் கிடைக்காதா என பலரும் ஏங்கிக்கிடக்க மிக எளிதாக விஷ்ணு விஷாலுக்கு அந்த லக் அடித்துள்ளது.

 ரஜினிக்காக கமல் படத்தை ஓட வைத்த ரசிகர்கள்

ரஜினிக்காக கமல் படத்தை ஓட வைத்த ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ஆரம்பித்து வேகமாக பிரபலமடையும் நேரத்தில் இரண்டு படங்களில் கவுரவ வேடத்தில் நடித்தார். அந்த இரண்டு படத்திலும் ரஜினி கலக்கியிருப்பார். முதல்படத்தின் ஹீரோ கமல், ஹீரோயின் ஸ்ரீ தேவி. படம் தாயில்லாமல் நானில்லை. கமல் ஸ்ரீதேவியை கடத்தி வைத்திருப்பதாக தவறாக சொல்லி அவர்கள் காதலை பிரிக்க வில்லன் டீம் ரஜினியை அனுப்பி வைப்பார்கள். ரஜியும் வருவார் கமலுடன் கடுமையான சண்டை நடக்கும். பின்னர் ஸ்ரீதேவி கமல் இருவரும் காதலர்கள் என தெரிந்து வாழ்த்திவிட்டுச் செல்வார். இதில் ரஜினி வரும் சீனுக்காகவே ரஜினி ரசிகர்கள் படத்தை பார்த்தனர்.

 நான் வாழ வைப்பேன் படத்தில் கலக்கிய ரஜினி

நான் வாழ வைப்பேன் படத்தில் கலக்கிய ரஜினி

இதேபோல் சிவாஜி கணேசன் நடித்த நான் வாழ வைப்பேன் படம். இது அமிதாப் நடித்த இந்திப்படத்தின் தழுவல். இதில் சாதாரணமாக நடிகர் நடித்த படத்தில் ரஜினி நடித்திருப்பார். ஆனால் ரஜினி கலக்கிய கலக்கலில் அவருக்கு இந்தப்படத்தில் பெரிய பெயர். சிவாஜியை காக்க ரஜினி கடைசியில் உயிரை விடுவார். இந்தப்படத்தில் ரஜினி வேடத்தை ஏன் எனக்கு தரவில்லை என நடிகர் திலகம் கேட்டதாகவும், கதைப்படி அமிதாப் ஹீரோ அந்த ரோலைத்தான் நீங்கள் செய்தீர்கள் என்று கூறியதாக அப்போது பேச்சு. அந்த அளவுக்கு தனது ரோலில் ரஜினி கலக்கி இருப்பார்.

 ரஜினி என்றால் ரஜினி தான்

ரஜினி என்றால் ரஜினி தான்

ரஜினிகாந்த் வில்லனோ, ஹீரோவோ, கடவுள் வேஷமோ எதைப்போட்டாலும் அதில் 100% உழைப்பைத்தருவார். தற்போது ஜெயிலர் படத்தை முடிக்கும் ரஜினிகாந்த் மேலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். லைகா நிறுவனம் இரண்டு படங்களையும் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்கிற நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப்படம் குறித்த அறிவிப்பில் ஒரு படத்தை ஏற்கெனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவதாக இருந்தது, இப்போது அந்தப்படத்தில் கவுரவ வேடத்தில் மட்டும் ரஜினி நடிக்கிறார், அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது என்கின்றனர்.

 மகளின் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்

மகளின் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்தப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் சிறப்பே மகளுக்காக தந்தை ரஜினி இந்தப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இன்னொரு சிறப்பு இந்தப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்கிற தகவல். ஹீரோ விஷ்ணு விஷாலுடன் விக்ராந்தும் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது என தகவல் ஓடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X