தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.. கூலி மேடையில் மனம் உடைந்து பேசிய ரஜினி.. தலைவர் இப்படி சொல்லிட்டாரே?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட்14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்க; சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி; ஆடியோ வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசிய விஷயம் ரசிகர்களிடையே ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

ரஜினிகாந்த்துக்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மகள் சௌந்தர்யா முதலில் ஒரு திருமணம் செய்து அந்தத் திருமண வாழ்க்கை சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்து விசாகன் என்பவரை காதலித்தார். உடனடியாக இந்தக் காதலுக்கு சம்மதம் தெரிவித்து இரண்டாவது திருமணத்தை முன் நின்று நடத்திவைத்தார் ரஜினிகாந்த்.

ஐஸ்வர்யா டைவர்ஸ்: இது ஒருபக்கம் இருக்க தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு; நாளுக்கு நாள் அதிகமானது. அவர்களை எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் இரண்டு பேரின் குடும்பத்தாரும் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. அவர்கள் இரண்டு பேரும் கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rajinikanth indirectly spoke about Dhanush - Aishwarya divorce at Coolie audio launch

அப்செட்டில் ரஜினிகாந்த்: தனது மூத்த மகளுக்கு டைவர்ஸ் நடக்கும் என்று ரஜினி எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தனுஷும், ஐஸ்வர்யாவும் நல்லபடியாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். முக்கியமாக ரஜினி மீது தனுஷும், தனுஷ் மீது ரஜினியும் அளவுகடந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகத்தான் தனுஷ் தயாரிப்பில் காலா திரைப்படத்தில் நடித்தார் ரஜினி. நேற்று வெளியான கூலி திரைப்படத்தின் ட்ரெய்லரையும் தலைவா என சொல்லி தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ரஜினியின் பேச்சு: இப்படிப்பட்ட நிலைமையில்தான் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய ரஜினிகாந்த், "நான் சாயும்போதெல்லாம் மக்கள் என்னை தாங்கி பிடித்திருக்கிறார்கள். தமிழ்நாடு மக்களின் பாதங்களில் தலை வணங்கி நன்றி சொல்கிறேன். எவ்வளவு பணம், பெயர், புகழ் என எது வந்தாலும் வீட்டுக்குள் நிம்ம்தியும், வெளியே கௌரவமும் இல்லையென்றால் எவ்வளவு வந்தாலும் பிரயோஜனம் இல்லை" என்றார். அவரது இந்தப் பேச்சு கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ரஜினிக்கு நிம்மதி இல்லையா?: அதுமட்டுமின்றி ரஜினியின் இந்தப் பேச்சு அவரது ரசிகர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்ப தொடங்கியிருக்கிறது. அதாவது முதலில் இரண்டாவது மகள் விவாகரத்தை நினைத்து கவலைப்பட்டார். பிறகு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததால் நிம்மதியடைந்தார். ஆனால் ஐஸ்வர்யாவின் விவாகரத்தை அவர் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை; தானே நேரடியாக பேசியும் தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து வாழ்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

திரைத்துறையினரின் கருத்து: அது அப்போதே அவருக்கு பெரிய மன கவலையை கொடுத்தது. அவர்கள் இரண்டு பேரும் பிரிந்து தனியாக வாழ்வது தன்னுடைய பேர பிள்ளைகளின் வாழ்க்கையை பாதித்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை இன்னமும் அவருக்கு இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் கூலி இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் அந்தப் பேச்சு எனவும் திரைத்துறையினர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் அவர் விரைவில் மன நிம்மதியை பெற வேண்டும் என்றும் அக்கறையோடு சொல்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X