45 சவரன் தங்கத்தை ஒப்படைத்த தூய்மை பணியாளர்.. ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசு.. தலைவர் மனசே மனசுதான்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதனையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள அவர்; கமலுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார். சூழல் இப்படி இருக்க சென்னையில் தனது வீட்டுக்கு தூய்மை பணியாளரை வரவழைத்து தங்க செயின் பரிசளித்த அவர்; அந்த பணியாளரின் குடும்பத்தினரை சந்தித்தார். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியூள்ளன.
தர்பார், அண்ணாத்த என தோல்வி முகங்களை பார்த்து வந்த ரஜினிக்கு ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து நடித்த வேட்டையன் சுமார் வரவேற்புதான். சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரொம்பவே நம்பிக்கை வைத்து நடித்தார். ஆனால் படம் படுதோல்வியையும் ட்ரோலையும் சந்தித்தது. கமலுக்கு கொடுத்த வெற்றி மாதிரி தங்கள் தலைவருக்கும் கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரஜினி ரசிகர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்றார்கள்.
அடுத்த படங்கள்: கூலியை முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். கண்டிப்பாக முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகமும் ஹிட்டடிக்கும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலானோர் இதில் நடிக்கிறார்கள். இதைத் தவிர்த்து பாலைய்யா, வித்யா பாலன் ஆகியோரும் முக்கியமான ரோல ஏற்றிருக்கிறார்கள் என கூறப்படுகிறது. முக்கியமாக ஷாருக்கானும் கமிட்டாகியுள்ளார் என சொல்லப்படுகிறது.

முக்கியமான ரோல்: முதலில் இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியபோது கூலி படத்தில் அமீர் கானை அழைத்து சென்று எப்படி டம்மி ஆக்கினார்களோ அதேபோல் தன்னையும் ஆக்கிடுவார்களோ என அவர் பயந்ததாகவும்; ஆனால் கதையில் ஷாருக்கிற்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கும்படியான ரோலை இயக்குநர் வடிவமைத்து; பாலிவுட் பாட்ஷாவை காம்ப்ரமைஸ் செய்துவிட்டார் என்றும் பாலிவுட் மற்றும் கோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.
ரஜினியின் குணம்: இதற்கிடையே ரஜினிகாந்த் திரைப்படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் பலரை நேரில் சந்தித்துவருவதையும் குறைத்துக்கொள்வதில்லை. விவிஐபிக்கள் மூதல் சாதாரணவர்கள் வரை தொடர்ந்து சந்திக்கிறார். சமீபத்தில் கூட மதுரையில் ஐந்து ரூபாய்க்கு பரோட்டா விற்கு ரஜினியின் ரசிகரான ரஜினி சேகர் என்பவரை வீட்டுக்கு வரவழைத்து சந்தித்தார். அப்போது அவருக்கு தங்க சங்கிலியையும் பரிசளித்தார்.
தூய்மை பணியாளருக்கு தங்க செயின்: இந்நிலையில் சென்னையில் தூய்மை பணியாளர் பெண் பத்மா என்பவர் சமீபத்தில் கேட்பாரற்று கிடந்த 45 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியது. அவரது நேர்மை பெரிய பாராட்டை பெற்றது. இப்போது அந்தப் பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டி தங்க சங்கிலியை பரிசாக கொடுத்தார் ரஜினி. மேலும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர்; உரையாடலையும் நிகழ்த்தினார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











