கமலுக்கு நேரில் பத்திரிகை வைத்த ரஜினி: விசாகனுடன் சவுந்தர்யா போட்டோஷூட்
சென்னை: திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த், விசாகன் கலந்து கொண்ட போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகனுக்கும் வரும் 11ம் தேதி போயஸ் கார்டன் வீட்டில் வைத்து மறுமணம் நடைபெற உள்ளது.
இதையடுத்து 12ம் தேதி மறுமண வரவேற்பு நடக்கவிருக்கிறது.

சவுந்தர்யா
திருமணத்திற்கு முன்பு சவுந்தர்யாவும், விசாகனும் கலந்து கொண்ட போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்களில் சவுந்தர்யா மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.

அழைப்பு
மகளின் மறுமணத்தையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்களை நேரில் சந்தித்து பத்திரிகை வைத்துள்ளார் ரஜினிகாந்த். இசைஞானி இளையராஜா, திமுக தலைவர் ஸ்டாலின், கமல் ஹாஸன் உள்ளிட்ட பலருக்கு நேரில் பத்திரிகை வைத்து அழைத்துள்ளார் ரஜினி.

விசாகன்
வஞ்சகர் உலகம் படத்தில் நடித்துள்ள விசாகன் சென்னையில் உள்ள அபெக்ஸ் லபாரடரீஸ் பிரைவேட் லிமிடேட் என்னும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இங்கிலாந்தில் படித்துவிட்டு சென்னையில் தொழில் செய்து வருகிறார் விசாகன்.

பத்திரிகை
ரஜினிகாந்த் தனது நண்பரான கமல் ஹாஸனை சந்தித்து பத்திரிகை கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











