Vettaiyan Audio Launch: ஸ்டார்களுக்கு எல்லாம் சுப்ரீம்.. ரஜினிகாந்தை பாராட்டிய அமிதாப் பச்சன்!

சென்னை: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்றைய நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடல்நல பாதுகாப்புக்காக அமிதாப் பச்சன் சென்னைக்கு வரவில்லை.

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், அனிருத், செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வந்துள்ளனர்.

vettaiyan vettaiyan audio launch rajinikanth

அமிதாப் பச்சன் மற்றும் பகத் ஃபாசில் இருவருமே இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை. பகத் ஃபாசில் ஷூட்டிங்கில் பிசியாக உள்ள நிலையில், வேட்டையன் ஆடியோ லாஞ்சுக்கு வரமுடியவில்லை என தெரிகிறது.

கல்கி படத்தின் ஹீரோ: நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி 1100 கோடி வசூலை கடந்த கல்கி படத்தின் மெயின் ஹீரோவே அமிதாப் பச்சன் தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபாஸ் கிளைமேக்ஸில் கர்ணனாக மாறிய இடத்தில் தான் ஹீரோவாக தெரிந்தார். 2ம் பாகத்தில் தான் அவருக்கும் கமல்ஹாசனுக்கும் வேலை இருக்கிறது. ஆனால், முதல் பாகத்தில் மொத்த படத்தையும் அமிதாப் பச்சன் தான் தாங்கி பிடித்திருந்தார்.

முதல் தமிழ் படம்: அமிதாப் பச்சன் உடன் ரஜினிகாந்த் சில இந்தி படங்களில் நடித்துள்ளார். அமிதாப் பச்சனின் 10க்கும் மேற்பட்ட இந்தி படங்களை தமிழில் ரீமேக் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். சிவாஜி படத்திலேயே ரகுவரன் கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப் பச்சனிடம் கேட்க்கப் பட்ட நிலையில், அப்போது சந்தர்ப்பம் அமையவில்லை. எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து அமிதாப் நடித்த உயர்ந்த மனிதன் படம் பாதியிலேயே நின்ற நிலையில், வேட்டையன் படம் தான் தனது முதல் தமிழ் படம் என அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

vettaiyan vettaiyan audio launch rajinikanth

வீடியோ மெசேஜ்: வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கும் போர்ஷன்களை எடுக்கவே படக்குழுவினர் ரஜினிகாந்த் உடன் இணைந்து மும்பைக்கு சென்றிருந்தனர். 81 வயதில் அதிகம் டிராவல் செய்யக் கூடாது என மருத்துவர்கள் ஆலோசனை அளித்துள்ள நிலையில், சென்னையில் நடக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வரமுடியவில்லை என்றும் வேட்டையன் படத்திற்கு வாழ்த்து சொல்லி அமிதாப் பச்சன் வெளியிட்ட வீடியோ மெசேஜை திரையில் வெளியிட்டு இருந்த நிலையில், அதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

ஸ்டார்களுக்கெல்லாம் சுப்ரீம்: ரஜினிகாந்த் உடன் பல வருடங்கள் கழித்து பணியாற்றிய அனுபவம் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியை அளித்துள்ளது. ரஜினிகாந்த் ஸ்டார்களுக்கெல்லாம் சுப்ரீம். வேட்டையன் படத்தை ஞானவேல் சிறப்பாக இயக்கியுள்ளார். அக்டோபர் 10ம் தேதி ரசிகர்கள் தியேட்டரில் திருவிழாவாக படத்தைக் கொண்டாடுவார்கள். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.

vettaiyan vettaiyan audio launch rajinikanth

பிரகாஷ் ராஜ் டப்பிங்: வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் டப்பிங் பேசியிருக்கிறார். ஜெய் பீம் படத்தில் பிரகாஷ் ராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த நட்பின் பேரில் ஞானவேல் அமிதாப் பச்சனுக்கு டப்பிங் பேச வைத்திருந்தாலும் அது பெரிதாக ஒட்டவில்லை என்கிற கருத்துக்கள் குவிந்து வருகின்றன. ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனின் ஃபேஸ் ஆஃப் காட்சி தரம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X