காலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala
Recommended Video

சென்னை: காலா படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த 7ம் தேதி ரிலீஸானது. படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
படம் வெளியான 6 நாட்களில் ரூ. 112 கோடி வசூலித்தது. ரஜினி படத்திற்கு இந்த வசூல் மிகவும் குறைவே

கார்த்திக் சுப்புராஜ்
ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 30 நாட்களுக்கு படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெறுகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

மகிழ்ச்சி
டார்ஜிலிங்கில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது, கடவுளின் அருளால் காலா படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான் இன்னும் 30 நாட்களுக்கு டார்ஜிலிங்கில் தான் இருப்பேன் என்றார்.

படம்
ராமகிருஷ்ண பரஹம்சா, சுவாமி விவேகானந்தர், தாகூர், சுபாஷ் சந்திர போஸின் மாநிலம் என்னை நெகிழ வைத்துள்ளது. அன்பான மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பலரும் காணாத பல அழகான இடங்கள் இங்கே உள்ளன. இந்த படம் மூலம் அந்த இடங்களை மொத்த நாடும் தெரிந்து கொள்ளும் என நம்புகிறேன் என்று ரஜினி தெரிவித்தார்.

விஜய் சேதுபதி
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் என்பதால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications











