மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ரஜினி சிறந்த நடிகரா?.. இயக்குநர் அமீர் சர்ச்சை பேச்சு!
சென்னை : மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ரஜினி சிறந்த நடிகரா என இயக்குநர் அமீர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
செங்களம் என்ற வெப் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.அமீர், வாணி போஜன், டேனியல், விஜி சந்திரசேகர், பிரேம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் ஆமிர், இந்த விழாவில் கலந்து கொண்டதற்கு காரணமே எஸ்.ஆர். பிரபாகரன் தான் என்றார். மேலும், இந்த தொடர் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்.

கலைக்கு அரசியல் கிடையாது
பின் வெளியில் காத்திருந்த செய்தியாளர்கள், அமீரிடம், ஆஸ்கர் விருது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமீர், இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆனால், அதற்குள் அரசியல் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஆராய்வது நம் வேலை இல்லை. கலைக்கு அரசியல் கிடையாது அந்த வகையில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.

ஆஸ்கர் பெரிய விருது இல்லை
ஆனால்,என்னை பொருத்தவரையில், ஆஸ்கர் விருது பெரிய விருது என்று நான் என்னைக்குமே நினைத்தது இல்லை. ஆஸ்கர் பெரிய விருது என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அனைவரும் அதை வியந்து பார்ப்பதால் அது உயரிய விருதுதாக கருதப்படுகிறது. அது அந்த நாட்டின் தேசிய விருது அவ்வளவு தான் அதில் ஒன்றும் சிறப்பு இல்லை.

அனைத்து விருதிலும் அரசியல்
30 வருடங்களுக்கு முன்பு விருதுகளுக்கு கிடைத்த அங்கிகாரம், மரியாதை என்பது வேறு, இப்போது அனைத்து விருதுகளிலும் அரசியல் இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஆஸ்கர் விருதை மட்டும் சொல்லவில்லை, தேசிய விருது,மாநில விருது, தனியார் அமைப்புகள் கொடுக்கும் விருது என அனைத்திலும் அரசியல் இருக்கிறது. எல்லாம் ஒரு லாபியில் தான் நடக்கிறது, இதுகுறித்து நாம் பேசவேண்டியது இல்லை என்றார்.

சிவாஜிக்கு ஏன் தேசிய விருது இல்லை
தொடர்ந்து பேசிய அமீர், இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகர் சிவாஜி கணேஷன் தான், ஆனால் சிவாஜி கணேஷனுக்கு இதுவரை தேசிய விருது கொடுக்கப்படவில்லை. மிகவும் தாமதமாக தேவர் மகன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிவாஜிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது கூட கொடுக்கப்படவில்லை, ஜூரியில் இருந்த நம் ஆட்களால் வற்புறுத்தி வாங்கப்பட்டது என்று சிவாஜியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்றார்.

ரஜினி சிறந்த நடிகரா?
2007 ஆம் ஆண்டு சிவாஜி படத்தில் நடித்ததற்காக ரஜினிகாந்திற்கு மாநில அரசு சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கப்பட்டது. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ரஜினி சிறந்த நடிகரா? அவர் சிறந்த என்டர்டெயினர் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, இதுமட்டுமில்லாமல், சிவாஜி படத்தில் சிறந்த நடிப்பு இருந்ததா?இதனால், விருதுகள் எல்லாமே ஒரு லாபியில் தான் நடக்கிறது என்பது என் கருத்து என்று இயக்குநர் அமீர் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











