ரஜினிகாந்த் அழகானவர் கிடையாது.. நடிப்பதற்கு அழகு தேவையில்லை.. நடிகர் லிவிங்ஸ்டன்!
சென்னை : சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க உள்ளது
இந்தநிலையில் ரஜினிகாந்த் அழகானவர் கிடையாது நடிப்பதற்கு அழகு முக்கியம் இல்லை என நடிகர் லிவிங்ஸ்டன் கூறியுள்ளது இணையதளத்தில் திடீரென வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களின் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாகின்றன அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்த படம் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக எடுக்கப்பட்டு வந்த அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து இருந்தார்.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் கிராமத்து கதை களத்தில் இந்த படத்தில் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது . தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து கலக்கியிருப்பார். மேலும் 90களில் ரஜினியுடன் இணைந்த ஜோடி போட்டு நடித்த மீனா மற்றும் குஷ்பூ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வந்து செல்வார்கள். பெரும் எதிர்பார்ப்பில் முழுக்க முழுக்க கமர்சியல் கதைகளில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக இந்த படம் அமைந்தது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த்
அண்ணாத்த வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இப்பொழுது நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் கோலமாவு கோகிலா டாக்டர் பீஸ்ட் டிஎன தொடர் வெற்றிகளை கொடுத்து தமிழ் ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக உள்ள நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது அனிருத் இசையமைக்க உள்ளார்.

ரஜினிகாந்த் அழகானவர் கிடையாது
இவ்வாறு இந்தியாவே போற்றும் மிகச் சிறந்த நடிகராக உள்ள ரஜினிகாந்த் அழகானவர் கிடையாது நடிப்பிற்கு அழகு முக்கியம் இல்லை என லிவிங்ஸ்டன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் அவர் பேசியதாவது.. இதுக்கு ஏஜ் இல்ல, கலர் இல்ல,அழகு இல்லை எதுவுமே தேவையில்லை கான்பிடன்ட் மட்டுமே முக்கியம். இந்தியாவிலேயே சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் என்று சொல்கிறார்கள். இங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவங்க ரெண்டு பேரும் அவ்வளவு அழகா.. இவங்கள விட அழகான ஆண்கள் உள்ளார்கள். அவர்கள் கூட கம்பேர் பண்ணும்போது ஒன்றுமே கிடையாது. ஆனால் அவருடைய இன்னர் கேரக்டர் தான் உண்மையான சூப்பர் ஸ்டார். இவ்வாறு நடிகர் லிவிங்ஸ்டன் பேசியுள்ள வீடியோ இப்பொழுது இணையதளத்தில் வைரலாகிறது.


Click it and Unblock the Notifications











