ரஜினி சொல்லித்தான் பேசுகிறேனா? ராகவா லாரன்ஸ் திடீர் அறிக்கை
Recommended Video
சென்னை: இதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், ரஜினிகாந்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுவான சில விஷயங்களை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது ட்வீட்டுகள், நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே.

ரஜினிகாந்த் பொறுப்பல்ல
என் கருத்துகளுக்கு ரஜினிகாந்த் எவ்வகையிலும் பொறுப்பல்ல. ரஜினி சொல்லித்தான் நான் பேசுவதாகச் சிலர் சொல்வது உண்மையற்றது. அவர் பேச விரும்பினால், தானாகவே பேசுவார். ஒருவரைத் தூண்டிவிட்டுப் பேசவைக்ககூடிய நபர் அல்ல அவர்.

எதிரானவன் அல்ல
என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம். நான் அவர் ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது ஆசீர்வாதமும், புகைப்படம் எடுத்துக்கொள்வதும் மட்டுமே. நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல, யாரையும் ஆதரிக்கவுமில்லை.

அரசியல் தொடர்பு
நான் எனது சேவையைச் செய்கிறேன், தேவைப்படும் போது எனது குழந்தைகளுக்கான உதவிகளைக் கேட்பேன், இதைத் தவிர, உதவி செய்தால் நன்றி தெரிவிப்பேன். எனக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை.

ஜல்லிக்கட்டு
ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் தேவையின்றி பிரச்னையில் இழுத்துச் செல்லப்பட்டேன். இதன் காரணமாக, எனக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கருத்து வேறுபாடும், சர்ச்சைகளும் எழுந்தன. எனவே நான் பேச வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டேன்.

புரியவைக்க முயற்சிப்பேன்
எனது பிறந்த இடம், மொழி மற்றும் எனது சேவை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர், அதற்கு சாந்தமாகப் பதிலளிப்பேன். ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்தே சாந்தமாகவே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு புரியவைக்க முயற்சிப்பேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











