»   »  'கிருஷ்ணகிரியாரே'.... 'அரசியல் ரஜினி'க்கு ரசிகர்கள் அளித்த புதுப் பட்டம்!

'கிருஷ்ணகிரியாரே'.... 'அரசியல் ரஜினி'க்கு ரசிகர்கள் அளித்த புதுப் பட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறந்த ஊரை வைத்து தங்கள் அபிமான தலைவர்களை அழைப்பது தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்.

வாழப்பாடியாரே, வீரபாண்டியாரே, ஆற்காட்டாரே, திண்டிவனத்தாரே மற்றும் இப்போதுள்ள எடப்பாடியாரே வரை நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்களை பிறந்த ஊரின் பெயரில் அழைத்துள்ளனர் ரசிகர்கள். காலப்போக்கில் இந்த தலைவர்களின் பெயர்கள் மறந்தாலும், அந்த ஊரின் பெயரில் அழைக்கப்பட்ட பட்டப் பெயர் நிலைத்துவிடும்.

Rajinikanth is now Krishnagiriyar!

ராமமூர்த்தி, ஆறுமுகம் போன்ற பெயர்களால் அறியப்பட்டதை விட வாழப்பாடியாரே, வீரபாண்டியாரே என்ற பெயர்களால்தான் இந்த தலைவர்கள் அதிகம் அறியப்பட்டனர்.

இப்போது அரசியலுக்கு வருவதில் நூறு சதவீதம் உறுதியாக உள்ள ரஜினிக்கு ரசிகர்கள் சூட்டியுள்ள புதுப் பெயர் கிருஷ்ணகிரியாரே.

ரஜினி, அவரது பெற்றோர்கள், மூதாதையர்களின் சொந்த ஊர் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள நாச்சிக்குப்பம் கிராமம் என்பதால் ரஜினியை கிருஷ்ணகிரியாரே என அழைத்து போஸ்டர் அடித்துள்ளனர் ரசிகர்கள்.

English summary
Rajini fans now give a new name to Rajinikanth as Krishnagiriyare, based on his birth place.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil