ரஜினியை நினைத்து கவலைப்பட்ட மகேந்திரன்
Recommended Video

சென்னை: இயக்குநர் மகேந்திரன் ரஜினிகாந்தை நினைத்து கவலைப்பட்டது உண்டு.
மகேந்திரன் இயக்குநராக அறிமுகமான முள்ளும் மலரும் படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்தார். அந்த படம் மகேந்திரனுக்கும், ரஜினிக்கும் தனி அடையாளத்தை பெற்றுத் தந்தது.

முள்ளும் மலரும், ரஜினி பற்றி மகேந்திரன் பேட்டிகளில் கூறியதாவது,
ரஜினிகாந்த் மட்டும் நடிக்கவில்லை என்றால் நான் முள்ளும் மலரும் படத்தை எடுத்திருக்க மாட்டேன். அந்த படத்திற்கு செட் பக்கமே வராத தயாரிப்பாளர் இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் இருந்தார், இளையராஜா இசையமைத்தார், பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். அந்த படம் ஹிட்டானது.
இன்றைய தலைமுறைக்கு ரஜினிகாந்த் எவ்வளவு திறமையான நடிகர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு ரஜினியின் ஸ்டைல் மட்டுமே தெரிகிறது. ரஜினி சிறந்த குணச்சித்திர நடிகர் ஆவார். காளி கதாபாத்திரத்தில் எளிதில் நடித்தார். ஈஸியா பண்ணிடுவாரு என்றார்.
ரஜினியை இயக்கிய மகேந்திரன் அவர் நடித்த பேட்ட படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











