இந்தியா வெற்றிக்கு யாரு காரணம்?.. ஷமியா மாப்ள.. இல்லை நம்ம சூப்பர்ஸ்டாரு மாமா.. பறக்கும் ட்வீட்ஸ்!
சென்னை: விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசி மிகப்பெரிய வெற்றி இலக்கை நேற்றய அரை இறுதி நாக்கவுட் உலக கோப்பை மேட்சில் கொடுத்த நிலையில், அதையும் எளிதாக வீழ்த்த நியூசிலாந்து அணி அதிரடி ஆட்டம் ஆடிய நிலையில், ஆபத்பாந்தவனாக மாறிய ஷமி 57 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு செல்ல வழிவகுத்தார்.
உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் முகமது ஷமியையும் 50வது சதத்தை விளாசி சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோலியையும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா வெற்றியடைய லக்கி சார்மாக மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும் வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் கொண்டாடி வரும் போஸ்ட்டுகள் சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளன.
இந்தியா வெற்றிக்கு ரஜினி தான் காரணம்: 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் வந்த நிலையில், அந்த ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது. இந்நிலையில், அதே போல இந்த முறை நியூசிலாந்த் மற்றும் இந்தியா இடையேயான வாழ்வா சாவா மேட்ச் நேற்று நடைபெற்ற நிலையில், அதை காண மும்பை வான்கடே மைதானத்திற்கு ரஜினிகாந்த் சென்ற போதே இந்தியா தான் வெற்றி பெறும் என ரசிகர்கள் சொன்னது போலவே இந்திய அணி வெற்றியை ருசித்துள்ளது. போட்டியின் போது கிரிக்கெட் கமெண்டேட்டர்களும் இதே விஷயத்தை சொன்னது தான் ஹைலைட்.
அனிருத் அப்பாவுடன்: இந்தியா மற்றும் நியூசிலாந்த் அணிகள் நேற்று உலக கோப்பை அரையிறுதி போட்டியில் மோதிய நிலையில், அந்த கிரிக்கெட் போட்டியை தனது மனைவி லதா மற்றும் அனிருத்தின் அப்பா ஹரி ராகவேந்திராவுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் பார்த்து ரசித்த காட்சிகள் டிரெண்டாகி வருகின்றன.

வெங்கட் பிரபு சொன்ன வார்த்தை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு இந்தியா வென்றதற்கான உண்மையான காரணமே ரஜினிகாந்த் அந்த மேட்ச்சை நேரில் சென்று பார்த்தது தான் என பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் தீயாக பரவி வருகிறது. அந்த போஸ்ட்டை வைத்து ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் சண்டை போட்டு வருவது தனிக் கதை.


Click it and Unblock the Notifications











