இவர் சொல்லலைன்னா தயாரிப்பாளராக ஆகி இருக்க மாட்டேன்.. தெனாலி படத்திற்கு சிபாரிசு செய்த ரஜினி!

சென்னை : சூப்பர் ஹிட் படமான தெனாலி படத்தில் ரஜினியின் பங்களிப்பை பற்றி கூறியுள்ளார் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார்.

1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே எஸ் ரவிக்குமார்.

சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம் என்று தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்தார்.

பிரபல நடிகர்களுடன் கே.எஸ் ரவிக்குமார்

பிரபல நடிகர்களுடன் கே.எஸ் ரவிக்குமார்

புரியாத புதிர் படத்தில் தொடங்கி புருஷ லட்சணம், நாட்டாமை, பெரிய குடும்பம், முத்து, பரம்பரை, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, போன்ற பல படங்களில் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்துள்ளார் கே எஸ் ரவிக்குமார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களின் வெற்றிக்கு இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் பங்கும் அதிகமாக இருக்கிறது. நடிகர் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் வைத்து இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

கிராமத்து கதைகள்

கிராமத்து கதைகள்

கிராமத்து படங்கள் என்று சொன்னாலே நாட்டாமை பெயர் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தனது படங்களில் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் கே எஸ் ரவிக்குமார் அதிகமாகவே மெனக்கெடுவார்.இயக்குநராக மட்டும் இல்லாமல் தான் இயக்கும் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் வியக்க வைப்பார். நடிப்பிலும் வெளுத்து வாங்குவார் கே எஸ் ரவிக்குமார்.

நடிப்பிலும் வெற்றி பெற்ற நாயகன்

நடிப்பிலும் வெற்றி பெற்ற நாயகன்

இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் வெற்றி பெற்றவர் கே எஸ் ரவிக்குமார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த கே எஸ் ரவிக்குமார். சேரன் பாண்டியன் படத்தில் சுந்தரம் என்ற கதாபாத்திரத்தால் அனைவராலும் அறியப்பட்டார். அதன் பிறகு பகைவன், பொண்ணு வீட்டுக்காரன், தமிழ், காதல் வைரஸ், அருள், தலைநகரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் கே எஸ் ரவிக்குமார்..

Recommended Video

Rewind Raja- Thalapathy | Thalapathi படத்தின் Climax பற்றிய உண்மை |Rajinikanth |தளபதி |*Kollywood
ரஜினி தான் காரணம்

ரஜினி தான் காரணம்

இந்நிலையில் தான் தயாரிப்பாளராக ஆன சூழ்நிலையை பற்றி கூறியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார். இது குறித்து அவர் கூறுகையில்,"படையப்பா படத்திற்கு பிறகு ரஜினியின் வீட்டுக்கு சென்றேன். அப்பொழுது கமல் என்னையே தெனாலி படத்தை தயாரிக்க சொல்வதாகவும் கூறினேன். அதைக் கேட்ட ரஜினி அப்படி என்றால் உடனே அட்வான்ஸ் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறினார். அவரே சொல்லிவிட்டார் என்றால் சரியாகத்தான் இருக்கும் உடனே செய்யுங்கள் என்று கூறினார். அதன் பிறகு ஹேராம் திரைப்படம் நீண்ட நாட்களாக படமாக்கப்பட்டு அதன் பிறகு தெனாலி படம் முடிய பல நாட்கள் ஆனதால் , கமல் படத்தின் டிஸ்கஷனுக்கு எல்லாம் ரஜினி வந்தார். நான் தயாரிப்பாளராக ஆக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் என்று கே.எஸ் ரவிக்குமார் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X