'வெந்து தணிந்தது காடு' படத்தில் ரஜினியா?..இது புது உருட்டா இருக்கே!

சென்னை : சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பான ஒரு செய்தி பரவி வருகிறது.

Recommended Video

Superstar Rajinikanth | 47 ஆண்டுகால Cinema ராஜ்ஜியம், கொண்டாடும் ரசிகர்கள்

கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கெளதம் வாசுதேவ், இசைப்புயலுடன் 3வது முறையாக கூட்டணி வைதத்துள்ளார்.

சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

சிம்பு

சிம்பு

குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய சிம்புவின் திரைப்பயணம், இன்று அசுர வேகத்தில் போய்கொண்டு இருக்கிறது. வெற்றி தோல்வி என சினிமாவில் அனைத்தையும் பார்த்துவிட்ட சிம்பு, நடிகனாக மட்டுமல்லாமல் சிங்கர், டைரக்டர், ரைட்டர் என வெரைட்டியாக கலக்கி வருகிறார்.

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ராதிகா சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தி இத்நானி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் தொடங்கி பின்னர் சென்னை மற்றும் மும்பையில் நடந்து முடிந்தது.

5 கெட்டப்

5 கெட்டப்

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவதும் முடிந்துள்ளது. இந்த படத்தில் முத்து என்ற முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு மற்றும் படத்தின் நாயகி சித்தி இத்நானி தனது டப்பிங்கை முடித்து விட்டதால் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.

புது உருட்டா இருக்கே

புது உருட்டா இருக்கே

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ் ரஜினிகாந்த் மிகவும் நெருக்கிய நண்பர் என்பதால், அவர் வருவதற்கு சம்மதித்தாக கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வரவில்லை. இந்த தகவலை கேள்விபட்ட சிம்பு ரசிகர்கள் இது புது உருட்டா இருக்கே என்று கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X