கோச்சடையான் ஹிட்டாக நியூமராலஜிபடி ரஜினி செய்த அதிரடி மாற்றம்
மும்பை: நியூமராலஜி படி கோச்சடையானின் ஆங்கல தலைப்பில் கூடுதலாக ஐ என்ற எழுத்தை சேர்த்துள்ளனர்.
பாலிவுட் படங்கள் வெற்றி அடைய நியூமராலஜிபடி தலைப்பில் மாற்றம் செய்கின்றனர். அவ்வாறு செய்தால் படம் ஹிட்டாகும் என்று தயாரிப்பாளர்கள் நம்புவதுடன் ஹீரோக்களும் நம்புகிறார்கள்.
இந்நிலையில் நியூமராலஜிபடி கோலிவுட்டிலும் ஒரு படத்தின் தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோச்சடையான்
ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையானின் ஆங்கில தலைப்பில் நியூமராலஜிபடி(எண் கணிதம்) I(ஐ) என்ற எழுத்தை கூடுதலாக சேர்த்துள்ளனர். இவ்வாறு செய்ததன் மூலம் படம் வெற்றியடையும் என்று நம்புகிறார்கள்.

ரஜினியே
திரையுலக நட்சத்திரங்கள் நியூமராலஜியை நம்புவது ஒரு விஷயம். ஆனால் சிலரால் கடவுளாகப் பார்க்கப்படும் ரஜினிகாந்த் எங்கள் பரிந்துரையை ஏற்று தலைப்பில் மாற்றம் செய்துள்ளார் என்று எண் கணித மேதை சஞ்சய் பி. ஜுமானி தெரிவித்துள்ளார்.

சஞ்சய்க்கு விருது
கோச்சடையானின் தலைப்பில் மாற்றம் செய்ய பரிந்துரைத்த சஞ்சய் மற்றும் அவரது சகோதரி ஸ்வேதா ஜுமானி ஆகியோருக்கு பாரத் நிர்மன் லெஜன்ட் ஆப் இந்தியா விருது வழங்கப்பட்டது.

சென்னை எக்ஸ்பிரஸ்
ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி கண்டமேனிக்கு வசூல் செய்து வசூலில் புதிய சாதனையே படைத்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் சஞ்சயின் பரிந்துரையின்பேரில் அதை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட்டனர். பாலிவுட் பிரபலங்கள் பலர் சஞ்சய் சொல்வதை அப்படியே செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











