Rajini New Movie - ரஜினிக்கும் வந்துவிட்டதா அந்த மோகம்?.. அப்போ ஞானவேல் படம் என்னாச்சு?

சென்னை: Rajini New Movie (ரஜினியின் புதிய படம்) ரஜினிகாந்த்தின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருப்பதால ஞானவேலுவுடன் இணைவதாக இருந்த படம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தர்பார் மற்றும் அண்ணாத்த படங்களை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் ரஜினிகாந்த். ஆனால் அவர் எதிர்பார்க்காத வகையில் அந்தப் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதனையடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினி. படத்துக்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் மோகன் லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Rajinikanth Joins With Waltair Veerayya Movie Director Bobby Kolli

பான் இந்தியா ஜெயிலர்: முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாகவும் ஒரே இரவில் நடப்பது போல் படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடையவிருக்கிறது. பான் இந்தியா அளவில் படத்தை வெளியிட்டு எப்படியாவது ஹிட் படமாக்கிட வேண்டும் என்பதில் ரஜினிகாந்த் தீவிர முனைப்போடு இருக்கிறார். நெல்சனுக்கு இந்தப் படம் முக்கியம் என்பதால் இப்படத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறாராம்.

அடுத்தது: ஜெயிலர படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ரஜினியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஜெயிலர் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அந்தப் படத்தில் ரஜினி இணைவார் என்றும், இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார்; படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது என்றும் கூறப்படுகிறது.

தெலுங்கு இயக்குநருடன்?: இந்நிலையில் ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று பரவியிருக்கிறது. அதாவது, ஜெயிலர் படத்தை முடித்த பிறகு தமிழ் - தெலுங்கில் பைலிங்குவல் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் ரஜினி. அந்தப் படத்தை வால்டர் வீரய்யா படத்தை இயக்கிய பாபி கொல்லி இயக்கவிருக்கிறார் என்று பேச்சு எழுந்திருக்கிறது. சிரஞ்சீவி நடிப்பில் உருவான வால்டர் வீரய்யா மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth Joins With Waltair Veerayya Movie Director Bobby Kolli

ரஜினிக்கும் மோகம்?: சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் தெலுங்கு இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர். அப்படி வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய்யும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷும், அனூதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயனும் நடித்தனர். ஆனால் அவர்கள் நடித்த படங்கள் அனைத்துமே படுதோல்வியை பரிசளித்தன.

சூழல் இப்படி இருக்க ரஜினியும் இப்போது தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியானதை அடுத்து; பைலிங்குவல் மோகம் ரஜினிக்கும் வந்துவிட்டதா? ஏன் இந்த வேண்டாத வேலை என்று பலர் கூறுகின்றனர்.

ஞானவேல் படம் என்னாச்சு?: அதேசமயம் இது வெறும் தகவல்தான். ஜெய் பீம் படத்தை பார்த்து பெரிதும் ஈர்க்கப்பட்ட ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். அதுமட்டுமின்றி ஞானவேலின் கதையில் நடித்தால் தன் மீது விழுந்திருக்கும் சில இமேஜ்கள் நீங்கும் என்பதால் ஜெயிலரை முடித்துவிட்டு ஞானவேல் படத்தில்தான் நடிப்பார் ரஜினி.

அதனை முடித்துவிட்டு வேண்டுமானால் பைலிங்குவல் படத்துக்கு செல்வார். அதேசமயம் அவரது கடைசி படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ்தான் என உறுதிபட கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X