Huma Qureshi: பார்க்கிங் பிரச்னை.. கொல்லப்பட்ட காலா பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரி கணவர்..
டெல்லி: காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி. இவரது சகோதரியின் கணவர் ஆசிப் குரேஷி, அவரது பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட பார்க்கிங் தகராறில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் தற்போது மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவம் தலைநர் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
ஆசிஃப் குரேசிக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையில் அவ்வப்போது பார்க்கிங் தொடர்பான பிரச்னைகள் எழுந்து வந்து கொண்டு இருந்துள்ளது. இப்படி இருக்கும் போது நேற்று அதாவது, ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு, ஆசிஃப் குரேஷியின் வீட்டின் முன், பக்கத்து வீட்டுக்கு வந்தவர்கள் இருவர் தங்களது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர். முதலில் இது தொடர்பாக ஆசிப் குரேஷி பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், அந்த இரண்டு வாகனத்தை அப்புற படுத்திய பின்னரும் வாக்குவாதம் நீடித்துள்ளது.

அதன் பின்னர் சிறுது நேரம் கழித்து இன்னொரு இரு சக்கர வாகனம் நிருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமாக இருந்து ஆசிஃப் குரேஷி மீண்டும் போய் கோபத்தில் கத்தியுள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பக்கத்து வீட்டுக்காரரும் அவரது சகோதரும் சேர்ந்து ஆசிஃப் குரேஷியை தாங்கள் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தாக் தாக்கி உள்ளார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆசிஃப் குரேஷியின் மனைவி, தங்களது உறவினர்களுக்கு அழைத்துள்ளார். ஆனால், பக்கத்து வீட்டுக்காரரும் அவரது சகோதரனும் தாக்கியதில், ஆசிஃப் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்துவிட்டார்.
கொலை: அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவரைச் சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். இந்த கொலை தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆசிஃப் குரேஷியின் மனைவி ஷாகின் கூறுகையில் பக்கத்து வீட்டுக்காரர் ஏற்கனவே தனது கணவரைக் கொல்ல முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். ஆசிஃப் குரேஷியை கொலை செய்த 19 வயது, உஜ்வால் மற்றும் 18 வயது கௌதம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகரில் கொலை: இந்த தகவல் தற்போது மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பார்க்கிங் பிரச்னைக்காக இரண்டு இளம் வாலிபர்கள் ஒருவரைக் கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டார்களே, தலைநகரிலேயே இந்த அளவுக்கு நடக்கிறதே என்று எல்லாம் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பார்க்கிங் படம்: அண்மையில் அறிவிக்கப்பட்ட 71வது தேசிய திரைப்பட விருதுகளில் கூட தமிழில் வெளியான பார்க்கிங் படத்திற்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர் என மூன்று விருதுகளை வென்றது. காரணம் பார்க்கிங் பிரச்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு இடையில் நடைபெறும் ஈகோ எந்த அளவுக்கு அவர்களை மாற்றுகிறது என்பது குறித்துதான் படம் பேசியது. பார்க்கிங் படத்தின் கதை கற்பனையானது என்றாலும், இப்போது ஹூமா குரேஷியின் சகோதரி கணவர் இந்த பார்க்கிங் பிரச்னையால் கொல்லப்பட்டுள்ள சம்பவம் குறித்த பேச்சு திரைத்துறையில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











