Ilaiyaraaja Biopic: இளையராஜா பயோபிக்கில் இணையும் சூப்பர் ஹீரோக்கள்.. லிஸ்ட் பெருசா இருக்கே!

சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள இளையராஜா படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற நிலையில், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் கமல்ஹாசன் உள்ளிட்டவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இணைந்திருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் தன்னுடைய அப்பா இடத்தில் வைத்து இளையராஜாவை பார்ப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். நிஜத்தை சொல்லுங்கள் என்று படத்தின் இயக்குநருக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் ஹார்மோனிய பெட்டியுடன் தனுஷ், சென்ட்ரல் ரயில் நிலையத்தை பார்த்தபடி காணப்படுவதாக அமைந்துள்ளது. எளிமையாக மற்றும் அழுத்தமாக வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப்படம் அடுத்த ஆண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ், மெர்குரி மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.

Rajinikanth Kamal haasan and Simbu going to join Ilaiyaraaja biopic it seems

இளையராஜா பயோபிக்: இசைஞானி, மேஸ்ட்ரோ என கொண்டாடப்படுபவர் இளையராஜா. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என அதிகமான மொழிகளில் இவர் இசையமைத்துள்ளார். சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளார். அவரது பயோபிக் தற்போது உருவாகவுள்ளது. நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ், மெர்குரி மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளன. இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் தனுஷ், இளையராஜா, அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

இளையராஜா பட அறிமுக விழா: சிறப்பு விருந்தினனராக நடிகர் கமல்ஹாசனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தான் இளையராஜாவை எப்போதும் தன்னுடைய அப்பா ஸ்தானத்தில் வைத்து பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். படத்தில் நிஜத்தை சொல்லுங்கள் என்று அருண் மாதேஸ்வரனுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே நேற்றைய தினம் இளையராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் தனுஷ் ஹார்மோனிய பெட்டியுடன் காணப்படுகிறார். ஒரு இளைஞன் சென்னை நகருக்குள் நின்று கொண்டிருக்கும்படி இந்த போஸ்டர் அமைந்துள்ளது. எளிமையான இந்த போஸ்டர் ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பான் இந்தியா படம்: மேலும் போஸ்டரில் The King of Music என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படம் துவக்கத்தில் தன்னுடைய பயணத்தை குறிப்பிடும் வகையில் மட்டுமே அமைந்ததாகவும் ஆனால் தற்போது சர்வதேச அளவில் இசை ஆர்வலர்களின் மனதை தொடும்வகையில் இந்தப் படத்தின் கதைக்களம் மாற்றமடைந்துள்ளதாகவும் இளையராஜா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். படக்குழுவினரின் வெற்றிக்கும் அவர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்கான திரைக்கதையை கமல்ஹாசன் எழுதவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Rajinikanth Kamal haasan and Simbu going to join Ilaiyaraaja biopic it seems

இளையராஜா படத்தில் முன்னணி ஹீரோக்கள்: தனுஷ் -அருண் மாதேஸ்வரனின் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு இளையராஜாவே இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் சிம்பு ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் நடிகர்களாகவே இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கேரக்டரில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்காக முன்னதாக தன்னுடைய வாழ்க்கையில் சுவாரஸ்யங்களை இளையராஜா சேகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X