ரஜினி - கமல் நடிக்கும் படம்.. இரண்டு பேரின் கெட்டப் இதுதான்.. அந்தக் காட்சி பட்டாசா இருக்காம்

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் மீது இருக்கும் ஹைப்பைவிட ரஜினியும், கமலும் சேர்ந்து நடிக்கும் படத்தின் மீது இப்போதிருந்தே எக்கச்சக்க ஹைப் எகிறியிருக்கிறது. நெல்சன் திலீப்குமார்தான் இப்படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. இதன் ப்ரோமோ ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்ற சூழலில்; அதில் எடுக்கப்பட்ட காட்சிகள் பற்றி புதிய தகவல்கள் கோலிவுட்டில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

ரஜினிக்கு 75 வயது ஆனாலும் 25 வயது இளைஞர் போல் சுறுசுறுப்பாக நடித்துவருகிறார். கடந்த வருடத்தில் கூலி படத்தில் நடித்து தோல்வியை சந்தித்தார். இந்த வருடத்தில் அவர் நடிப்பில் ஜெயிலர் 2 படம் வரவிருக்கிறது. இதனை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அப்படத்துக்கு தலைவர் 173 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுந்தர்.சிதான் முதலில் இயக்குவதாக இருந்தார். ஆனால் அவர் வெளியேறியதால் இளம் இயக்குநரான சிபி உள்ளே வந்திருக்கிறார்.

ரஜினி - கமல் நடிக்கும் படம்: கமல் நடிப்பில் ரஜினி நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு முழு மகிழ்ச்சியையும் கொடுக்கவில்லை. மாறாக இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால்தான் திருவிழா பெரிதாக இருக்கும் என்பது அவர்களது கணக்கு. ஏற்கனவே அவர்கள் சேர்ந்து நடித்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் (20 வருடங்கள்) ஆகிவிட்டன. இருவருமே தங்களது கரியரின் இறுதிக்கட்டத்தில் இருப்பதால்; இப்போதைக்கு விட்டால் அந்த மேஜிக்கை காணவே முடியாது என ஏக்கப்பட்டார்கள் ரசிகர்கள். அவர்களுமே நாம் சேர்ந்து நடிக்கலாம் என்ற மைண்ட் செட்டுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

Rajinikanth amp amp Kamal Haasan Reunion Film Promo Details Leak 80s Getup Creates Massive Buzz
Photo Credit:

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்?: முதலில் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தார் என்பதும்; அவர் கூறிய கதையில் திருப்தி இல்லாததால் அவரை ரஜினி, கமல் டிக் செய்யவில்லை என்றும் தெரிகிறது. லோகேஷுக்கு பதிலாக தங்களது குட் புக்கில் இருக்கும் நெல்சன் திலீப்குமாரை டிக் செய்திருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை இயக்கி கமலையும், ஜெயிலர், ஜெயிலர் 2 படங்களை இயக்கி ரஜினியையும் கவர்ந்துவிட்டதால்தான் அவருக்கு இந்த பெரிய வாய்ப்பு கிடைத்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

நம்பிக்கையில் ரசிகர்கள்: நெல்சன் திலீப்குமாரால் ரஜினி, கமல் இரண்டு பேருக்கும் தகுந்தபடியான கதையை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கவே செய்கிறது. முக்கியமாக தாங்கள் சேர்ந்து ஒரு காமெடி மற்றும் லைட் ஹர்ட்டட் கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் அவர்கள் விரும்புவதாலும்; அந்த ஜானரில் நெல்சன் கில்லி என்பதாலும் நிச்சயம் பந்தயம் அடிப்பார் என்று நம்பலாம். ஜெயிலர் 2 படத்தின் பணிகளை முடித்துவிட்டு முழுமையாக இந்தப் பட பணிகளில் அவர் இறங்கவிருக்கிறாராம்.

புதிய தகவல்: சூழல் இப்படி இருக்க படத்தின் ப்ரோமோ ஷூட் சில நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ஷூட்டில் ரஜினியும், கமலும் 80ஸ் கெட்டப்பில் இருந்ததாகவும்; கார் சாவியை கமலிடம் தூக்கி போட்டுவிட்டு ஸ்டைலாக வந்து காரில் ரஜினி அமர; இரண்டு பேரும் சேர்ந்து அந்த காரில் கிளம்புவது மாதிரியும் காட்சிகள் எடுக்கப்பட்டதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்த ஷூட்டிங்கின்போது ரஜினிகாந்த் அவ்வளவு மகிழ்ச்சியாகவும்; கவுண்ட்டர்கள் அடித்துக்கொண்டு இருந்ததாகவும் நேரில் பார்த்ததாக சிலர் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X