twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் கிருஷ்ணா மறைவு... தம்பியின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்… மகேஷ் பாபுவுக்கு ரஜினி, கமல் ஆறுதல்

    |

    ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் மூத்த நடிகருமான கிருஷ்ணா மாரடைப்பால் இன்று காலை காலமானார்.

    உயிரிழந்த நடிகர் கிருஷ்ணா, தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணாவின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, மகேஷ் பாபுவுக்கும் ஆறுதல் கூறியுள்ளனர்.

    என் அம்மாவோட முதல் டோலிவுட் ஹீரோ.. தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு.. வனிதா விஜயகுமார் உருக்கம்! என் அம்மாவோட முதல் டோலிவுட் ஹீரோ.. தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு.. வனிதா விஜயகுமார் உருக்கம்!

    மூத்த நடிகர் கிருஷ்ணா மறைவு

    மூத்த நடிகர் கிருஷ்ணா மறைவு

    தெலுங்கு மூத்த நடிகர் கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணா, சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார். மறைந்த கிருஷ்ணா டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு, ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் அம்மா இந்திரா தேவியும் செப்டம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாமல் காலமானார். இப்போது தந்தை கிருஷ்ணாவும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது மகேஷ் பாபுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    சூப்பர் ஸ்டார் இரங்கல்

    சூப்பர் ஸ்டார் இரங்கல்

    இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினியும் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மறைவு திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு. அவருடன் 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ளேன். அந்த நினைவுகள் அப்படியே மனதுக்குள் இருக்கின்றன. கிருஷ்ணாவை இழந்து வாடும் அவரது மகன் மகேஷ் பாபு உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.

    ரஜினியும் கிருஷ்ணாவும்

    ரஜினியும் கிருஷ்ணாவும்

    ரஜினியும் மறைந்த கிருஷ்ணாவும் மூன்று தெலுங்கு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். முதலில் 1978ம் ஆண்டு இருவரும் சேர்ந்து 'Anna Dammula Saval' என்ற படத்தில் நடித்தனர். அதனைத் தொடர்ந்து 1979ம் ஆண்டு வெளியான 'Iddaru Asadhyule' என்ற படத்திலும் ரஜினிகாந்த், கிருஷ்ணா இணைந்து நடித்தனர். ஆக்சன் ஜானரில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், ரஜினி - கிருஷ்ணா கூட்டணியில் 1980ம் ஆண்டில் 'ராம் ராபர்ட் ரஹீம்' என்ற படம் வெளியானது. மூன்று மதங்களைச் சேர்ந்த நண்பர்களை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவானது. இதில், ரஜினிகாந்த் ராம் கேரக்டரிலும், கிருஷ்ணா ராபர்ட் பாத்திரத்திலும் நடித்திருந்தனர். சந்திர மோகன் ரஹீம் கேரக்டரில் நடிக்க, ஸ்ரீதேவி, படாபட் ஜெயலக்‌ஷ்மி ஆகியோரும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தனர்.

    கமல்ஹாசன் இரங்கல்

    கமல்ஹாசன் இரங்கல்

    இந்நிலையில், உலக நாயகன் கமல்ஹாசனும் நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த கிருஷ்ணா மறைந்துவிட்டார். அவருக்கு என் அஞ்சலி. அன்னை, சகோதரர், தந்தை என அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து துக்கத்தில் வாடும் தம்பி மகேஷ் பாபுவின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என ட்வீட் செய்துள்ளார். ரஜினி, கமலை தொடர்ந்து நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்களும் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனார்.

    தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

    தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

    மேலும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கிய மூத்த நடிகர் கிருஷ்ணா மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். கிருஷ்ணா சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு திரையுலகில் இயங்கி வந்தவர். 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பத்மபூஷன் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் அவரது மகன் மகேஷ் பாபு உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Mahesh babu's father Krishna, a famous actor in the Telugu film industry, passed away due to a heart attack. After this, actors Rajinikanth and Kamal Haasan tweeted their condolences to Krishna.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X