ரஜினியை வச்சு இப்படி எல்லாம் செய்தால் கா.சு.வை ஏன் பிடிக்காது?
Recommended Video

சென்னை: ரஜினிகாந்தும், கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்து பேட்ட பராக் என்று கூறும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் ரிலீஸாகி வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற கார்த்திக் சுப்புராஜின் எண்ணம் நிறைவேறிவிட்டது.
ரஜினி ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ரஜினி
ரஜினியும், கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்து பேட்ட பராக் என்று கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தை போன்றே நிஜத்திலும் ரஜினி க்யூட்டாக கூறுகிறார். ரஜினி இது போன்று வீடியோவில் பன்ச் டயலாக் பேசுவது எல்லாம் அரிது. அதை செய்த கார்த்திக்கை ரசிகர்கள் எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.

திருப்தி
பல காலம் கழித்து ரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டது போன்ற திருப்தியை அளித்துள்ள படம் பேட்ட. அதனால் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

புதுப்படம்
ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க உள்ளார் ரஜினி. பேட்ட படத்தை பார்த்து தனது ரசிகர்கள் அடைந்துள்ள மகிழ்ச்சியை பார்த்த ரஜினி கார்த்திக் சுப்புராஜுடன் சேர்ந்து மீண்டும் ஒரு தரமான சம்பவம் செய்வது என்று முடிவு செய்துள்ளாராம்.

கீர்த்தி
மீண்டும் ஒரு தரமான சம்பவம் செய்வதற்கு முன்பு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதல்வராகப் போகிறார் ரஜினி. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











