மருமகன் தனுஷை ஆசீர்வாதம் செய்து கிளாப் அடித்து விஐபி 2 படத்தை துவக்கி வைத்த ரஜினி
சென்னை: மருமகன் தனுஷின் விஐபி 2 படத்தை கிளாப் அடித்து ஆசீர்வாதம் செய்து துவக்கி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.
தனுஷ் நடிப்பில் ஹிட்டான விஐபி படத்தின் இரண்டாம் பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார், கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.
படத்தை ரஜினிகாந்த் கிளாப் அடித்து ஹீரோ மருமகனை ஆசீர்வாதம் செய்து துவங்கி வைத்தார்.
ரஜினி
விஐபி 2 பட பூஜையில் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். மருமகனுக்கு மாலை அணிவித்து கிளாப் போர்டை தட்டி படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
வாழ்த்து
பூஜையில் கலந்து கொண்ட ரஜினி விஐபி 2 படக்குழுவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தனுஷ்
இதை விட நான் என்ன கேட்க முடியும்? நன்றி தலைவா உங்களின் ஆசியுடன் விஐபி இன்று துவங்கியது. #raghuvaranisback என தனுஷ் ட்வீட்டியுள்ளார்.
சவுந்தர்யா
விஐபி2 படத்தை வாழ்த்திய ரஜினிக்கு பதில் அளிக்கும் வகையில் ஐ லவ் யூ அப்பா என ட்வீட்டியுள்ளார் சவுந்தர்யா.


Click it and Unblock the Notifications











