துபாயில் கால் வைத்த "கபாலி".. ஹெலிகாப்டரில் பிரஸ்மீட்டுக்கு புறப்பட்ட ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்!
2.0 திரைப்பட பாடல் வெளியீட்டிற்காக துபாய் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் பாடல் வெளியீடு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.
Recommended Video

துபாய் : 2.0 பாடல் வெளியீடு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் துபாயில் ஹெலிகாப்டரில் புறப்பட்ட ஸ்டில்கள் வெளியாகியுள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான உருவாகியுள்ள நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 2.0 திரைப்படத்தின் பாடல் வெளியீடு துபா0யல் நாளை அதிரி புதிரியாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக லைகா நிறுவனம் மிகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது.

நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னையில் இருந்து தனது குடும்பத்தாருடன் துபாய் சென்றார். இந்நிலையில் 2.0 பாடல் வெளியீடு தொடர்பாக லைகா நிறுவனம் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹெலிகாப்டரில் அமர்ந்திருக்கும் ஸ்டில்லை லைகா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மஹாலிங்கம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதே போன்று 2.0 பிரஸ்மீட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களுக்கு டுவிட்டரில் வெளியாகியுள்ளது. பிரஸ் மீட் அரங்கமும் மிக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











