Thalaivar 171: தலைவர் 171 எப்படி வரும்?.. சும்மா சிரிச்சுக்கிட்டே சூப்பர்ஸ்டார் சொன்ன அந்த பதில்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக ஜெய்பீம் இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன்னதாகவே தலைவர் 171 படத்தின் இயக்குநர் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நிலையில், ரஜினி ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் தலைவர் 171 படத்தின் மீது எழுந்துள்ளது.

இந்நிலையில், காரில் சென்று கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் தலைவர் 171 ஆவது படம் எப்படி இருக்கும் என்கிற கேள்வியை முன் வைத்தனர். அதற்கு ரஜினிகாந்த் அளித்த பதில் தற்போது தீயாக பரவி வருகிறது.

Rajinikanth latest reply about Thalaivar 171 movie video trending in social media

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி: லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கிய நிலையில், சைமா விருது விழாவில் அந்தத் திரைப்படம் அதிகபட்சமாக ஐந்து விருதுகளை வென்று மாஸ் காட்டியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் சிறந்த பின்னணிப் பாடல்களுக்கான விருது விக்ரம் படத்திற்காக கிடைத்துள்ளது.

விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. லியோ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது.

தலைவர் 171 சம்பவம்: இந்நிலையில், கமல், விஜய்யை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பும் லோகேஷ் கனகராஜ்க்கு கிடைத்துள்ளது. இதன் காரணமாக, தலைவர் 170 படத்தை மறந்துவிட்டு ரசிகர்கள் தலைவர் 171 திரைப்படம் எப்படி இருக்கும் என்றும் அந்த படம் எப்போது வரும் என்கிற ஆவல்தான் அதிகமாக உள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பிய நிலையில், முதலில் லைகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படம் தான். அதன் பிறகுதான் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் படம் ரெடியாக இன்னும் நிறைய நாட்கள் உள்ளது என்றார்.

ரஜினிகாந்த் பதில்: மீண்டும் ரஜினிகாந்திடம், அந்த படம் எப்படி சார் வரும் என்கிற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் முன்வைத்த நிலையில், வழக்கம்போல சிரித்து விட்டு, Definitely நல்லாத்தான் வரும் எனக்கு கூறிவிட்டு கிளம்பி விட்டார்.

தலைவர் 171 படம் குறித்து ரஜினிகாந்த் பேசிய லேட்டஸ்ட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தை வைத்து தரமான சம்பவத்தை செய்வார் என ரசிகர்கள் வெயிட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X