Thalaivar171: அடுத்த ஆண்டு தீபாவளி ரேஸுக்கு தயாராகும் தலைவர்171 படம்.. லோகேஷின் வேற லெவல் ப்ளான்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தையும் இயக்க கமிட்டாகியுள்ளார் லோகேஷ். படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 171 படத்தை தயாரிக்கவுள்ளது.

Rajinikanth -Lokesh Combination Thalaivar 171 movie to be planned for Diwali 2024 release

அடுத்த ஆண்டு தீபாவளி ரேசிற்கு தயாராகும் தலைவர் 171 படம்: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லியோ. நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ள இந்தப் படத்தில் மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாஸ் காட்டி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் பான் இந்தியா படமாக லியோ ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் அடுத்தடுத்த மொழி போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களுக்கு ஊட்டம் கொடுத்துள்ளது. மேலும் படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பையும் படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். சென்னையில் வரும் 30ம் தேதி லியோ படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ளது.

இந்தப் படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ என இரட்டை கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம்கூட இல்லாத நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனிடையே, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171 படத்தில் கமிட்டாகியுள்ளார். இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு தயாரிப்புத் தரப்பான சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளிலும் லோகேஷ் கனகராஜ் பிசியாக ஈடுபட்டுள்ளார். அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக தலைவர் 171 படத்தில் லோகேஷுடன் அவர் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கை சரியான திட்டமிடலுடன் 8 மாதங்களில் நிறைவு செய்ய லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படம் அடுத்த ஆண்டில் தீபாவளி ரிலீசாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி இணையவுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை தற்போதே ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X