மனுஷன் குழந்தை மாதிரி என்ஜாய் பண்ணியிருக்காருய்யா.. ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டீசர் பாத்தீங்களா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் டீசர் வெளியாகியுள்ளது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168வது படமான அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி என பெரும் பட்டாளமே நடித்து வருகிறது.
இந்தப் படத்தின் ஷுட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஷெட்யூல் முடிந்த பிறகு ஓய்வில் இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

மேன் வெர்சஸ் வைல்டு
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடந்த மேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் நடிகர் ரஜினி பங்கேற்றிருந்தார். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் இயக்குநருமான பியர் கிரில்ஸ் உடன் படங்கேற்றார். அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ரஜினியும் பங்கேற்றது பெரும் பெருமையாக பார்க்கப்பட்டது.

மோஷன் போஸ்டர்
கடந்த ஜனவரி மாதம் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வன ஆர்வலர்கள் எதிர்ப்பால் ஒரே நாளில் படப்பிடிப்பு முடித்துக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்.

இன்று டீசர்
அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 27ஆம் தேதி ரஜினி காந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் புரமோ வெளியானது. அதையும் கொண்டாடி தீர்த்தனர் ரஜினி ரசிகர்கள். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் டீசரை பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மார்பளவு தண்ணீரில்
அதில் நடிகர் ரஜினிகாந்த் ஹெல்மெட் போட்டுக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, கயிறை பிடித்துக்கொண்டு மலை மீது ஏறுவது, ஆற்றில் இறங்கி மார்பளவு தண்ணீரில் நடப்பது என அட்டகாசமாய் உள்ளது அந்த டீசர். மேலும் தனது ஸ்டைலில் கண்ணாடியை போடுவது உள்ளிட்ட காட்சிகளும் அந்த டீசரில் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு சவாலையும்
அதோடு ஊஹு என கைகளை தூக்கி ரஜினி கொண்டாடுவது போன்ற காட்சியும் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக டிவிட்டியிருக்கும் பியர் கிரில்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இடைவிடாத நேர்மறை மற்றும் விட்டுக்கொடுக்காத அவரது ஸ்பிரிட் அவர் மீது வீசப்படும் ஒவ்வொரு சவாலையும் அவர் எதிர்கொண்ட விதம் காட்டில் அவ்வளவு தெரிந்தது. மரியாதை! என பதிவிட்டுள்ளார்.
சூப்பர் தலைவா
இந்த நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினி காந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு குழந்தையை போல் என்ஜாய் செய்திருக்கின்றார். பியர் கிரில்ஸின் இந்த வீடியோவை பார்த்த இந்த ரசிகர், யோவ் பியர் கிரில்ஸ் , என்னையா எங்க தலைவரை பேர் சொல்லி கூப்புடுற... தலைவா, சின்ன குழந்தைங்க போல செமயா என்ஜாய் பண்ணியிருக்கீங்க போல காட்டுல.. சூப்பர் தலைவா என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











