ரஜினிகாந்த்தை சந்தித்த திமுக MLA.. தேர்தல் நெருங்கிய நேரத்தில் திடீர் சந்திப்பு,. காரணம் என்ன?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்குத் திரும்பினார். இப்படி இருக்கையில் அவரது விடு அமைந்துள்ள போயஸ்கார்டன் பகுதி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வருவதால், அந்த தொகுதியின் திமுக வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான மருத்துவர் எழிலன் ரஜினியைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, தொகுதியில் நடைபெற்ற பணிகள் தொகுப்பு அவரிடம் அளித்து உரையாடினோம் என்றும் எழிலன் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக வேட்பாளரை அவர் சந்தித்துள்ளது அரசியல் தளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக் கட்சி ஆரம்பித்து தேர்தலைச் சந்திப்பதாக இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை மற்றும் கொரோனா பரவல் காரணமாக அந்த முயற்சியை அவர் அப்படியே கைவிட்டார். இது மட்டுமல்லாமல், தனது தொடங்கப்படாத கட்சிக்கு மூடுவிழா நடத்தினார். இப்படி இருக்கையில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக - அதிமுக கூட்டணியுடன் நெருக்கம் காட்டி வந்தார்.
தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரத்திற்காக பாஜக மேலிடத்தில் இருந்து யார் வந்தாலும் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திமுகவுடன் மிகவும் இணக்கமாகவே செயல்பட்டு வருகிறார். தற்போது பாஜக - அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரத்திற்காக பாஜக மேலிடத்தில் இருந்து யார் வந்தாலும் அவர்கள் ரஜினி வீட்டுப்பக்கமே செல்வது கிடையாது. மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலுக்கு ரஜினியைச் சந்தித்து வாக்கு கேட்காத திமுக வேட்பாளர், இம்முறை அவரைச் சந்தித்து வாக்கு கேட்டது, திமுகவுடனான அவர் இணக்கமாக இருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆதரவு: அதேபோல் நடிகர் விஜய்யின் தவெக ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து சொன்ன சர்ச்சைக் கருத்துக்கு திமுகவினர் தான் அதிக அளவில் பதிலடி கொடுத்தனர். மேலும் இம்முறை ரஜினியின் ஆதரவு திமுக கூட்டணிக்குத்தான் என்றும் பேச்சுக்கள் உலா வந்து கொண்டு இருக்கும் நிலையில் அதை ரஜினி தரப்பில் மறுக்கவும் இல்லை.


Click it and Unblock the Notifications