ஐரோப்பிய ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த்!
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஐரோப்பாவிலிருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த ரசிகர்களை தனது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். ஐரோப்பாவில் தற்போது வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர் தனது குடும்பத்தினரோடு ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்.
ஐரோப்பாவிலிருந்து தன்னைப் பார்க்க விரும்பிய தந்து ரசிகரின் குடும்பத்தினரை தனது வீட்டுக்கு வரவழைத்துச் சந்தித்துள்ளார் ரஜினிகாந்த். ரஜினியோடு ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

தன்னைச் சந்திக்க மிகவும் ஆர்வமாக இருக்கும் ரசிகர்களை தனது வீட்டிற்கே வரவழைத்து விருந்து கொடுப்பது ரஜினிகாந்தின் வழக்கம். ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவ்வப்போது இப்படி தன் மீது பிரியமாக இருக்கும் ரசிகர்களைச் சந்திப்பார் ரஜினி.
'கபாலி' பட சமயத்தில் 'கபாலிடா' எனும் டயலாக் மிகவும் பிரபலம். அப்போது 'பொண்டாட்டிடா...' என சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு பெண் ரஜினியைப் போலவே பேசிய வீடியோ பயங்கர வைரலானது. அவர் யாரென விசாரித்துத் தெரிந்துகொண்ட ரஜினி அவரிடம் பேசினார்.
பிறகு அவர் ரஜினியின் தீவிர ரசிகை என்பதை அறிந்து அவரை தன் வீட்டிற்கு அழைத்து ஆச்சரியமளித்தார். வெளிநாட்டு ரசிகர்களைக் குடும்பத்தோடு சந்திக்கும் ரஜினி தமிழகத்தில் இருக்கும் ரசிகர்மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து சமீபத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











