துபாயில் சர்வதேச நிருபர்களுடன் சந்திப்பு... ஹெலிகாப்டரில் பறந்து வந்த ரஜினி மற்றும் 2.0 குழு!
Recommended Video

2.0 திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா-வீடியோ
துபாய்: நாளை ரஜினிகாந்தின் 2.0 படத்தின் இசை வெளியீடு துபாயில் நடக்கிறது. அதற்கு முன் இன்று சர்வதேச செய்தியாளர்களுடனான சந்திப்பு துபாய் 7 நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் குழுவினர் இரு ஹெலிகாப்டர்களில் சந்திப்பு நடக்கும் ஹோட்டலுக்கு வந்திறங்கினர்.

ரஜினிகாந்த், எமி ஜாஜ்கசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நிர்வாகி ராஜு மகாலிங்கம் ஒரு ஹெலிகாப்டரிலும், ஷங்கர், ஏஆர் ரஹ்மான், அக்ஷய் குமார் ஆகியோர் இன்னொரு ஹெலிகாப்டரிலும் பறந்தனர்.

பிரஸ் மீட் நடக்கும் 7 நட்சத்திர ஹோட்டலின் மாடியில் அமைந்துள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டர்கள் இறங்கின.
ஹெலிகாப்டரிலிருந்து வந்து இறங்கிய ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இன்னும் சிறிது நேரத்தில் செய்தியாளர் சந்திப்பு நடக்கவுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications