»   »  காலா படப்பிடிப்புக்கு இடையே மகாராஷ்டிரா முதல்வரின் மனைவியை சந்தித்த ரஜினி

காலா படப்பிடிப்புக்கு இடையே மகாராஷ்டிரா முதல்வரின் மனைவியை சந்தித்த ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: லெஜண்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியதாக மகாராஷ்டிரா முதல்வரின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் மும்பை சென்றார். மும்பையில் தாராவி, அந்தேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

Rajinikanth meets Maharashtra CM's wife

10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். மீண்டும் 24ம் தேதி மும்பை சென்று அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

இதற்கிடையே மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதாவை அவர் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து அம்ருதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

லெஜண்ட் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் கிரேட் மீட்டிங். சமூக விவகாரங்கள், தீர்வுகள் குறித்து அவர் விவாதித்தார் என தெரிவித்துள்ளார்.

English summary
Rajinikanth has met Maharashtra CM Devendra Fadnavis' wife Amruta in Mumbai while he was shooting for his upcoming movie Kaala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil