மகள் செளந்தர்யாவை பார்க்க சென்ற ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்.. டிரெண்டாகும் #Thalaivar

சென்னை: லம்போர்கினியில் லயன் போனது எங்கே என்ற கேள்விக்கான விடை புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.

லாக்டவுனில் மிகவும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருந்து வந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று திடீரென காரில் வெளியே சுற்றிய, வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகின.

மாஸ்க் அணிந்தபடி மன்னன் நடிகர் மாஸாக காரில் போன புகைப்படங்களை பதிவிட்டு, #LionInLamborghini என்ற ஹாஷ்டேக் நேற்று டிரெண்டானது. இந்நிலையில், தற்போது அவர் எங்கு சென்றார் என்ற விவரம் அறிந்த பின்னர், #Thalaivar என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

லாக்டவுன் குறும்படம்

லாக்டவுன் குறும்படம்

கொரோனா பரவல் தொடங்கிய நிலையில், அது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் விழிப்புணர்வு கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். பின்னர், இந்தியாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், மோகன் லால், மம்மூட்டி உடன் இணைந்து ரஜினிகாந்த் லாக்டவுன் குறும்படம் ஒன்றிலும் நடித்து இருந்தார்.

வெளியே வந்து விளக்கேற்றினார்

வெளியே வந்து விளக்கேற்றினார்

அரசு மற்றும் மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றக் கூடிய குடிமகனான நடிகர் ரஜினிகாந்த், கொரோனா காலத்தில் அதிகமாக வெளியே தென்படவே இல்லை. பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, தனது வீட்டில் இருந்து வெளியேறி, மெழுகுவர்த்தி விளக்கை ஏற்றிய புகைப்படங்கள் அப்போது வைரலாகின.

அண்ணாத்த ஷூட்டிங்

அண்ணாத்த ஷூட்டிங்

மேலும், நடிகர்களின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும் எனக் கருதிய சூப்பர்ஸ்டார் சன் பிக்சர்ஸிடம் ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தார். கொரோனா பரவல் சரியானாலும், அடுத்த ஆண்டு ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம், நடிகர்களின் ஆரோக்கியம் தான் முக்கியம் என அவர் விடுத்த கோரிக்கையை தயாரிப்பு தரப்பும் ஏற்றுக் கொண்டது.

லம்போர்கினியில் லயன்

லம்போர்கினியில் லயன்

இந்நிலையில், நேற்று, திடீரென லம்போர்கினி காரில் நடிகர் ரஜினிகாந்த் வெளியே சென்றதை பார்த்த ரசிகர்கள், அதனை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து, #LionInLamborghini என்ற ஹாஷ்டேக் உருவாக்கி வேற லெவலில் டிரெண்ட் செய்தனர். இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த் எங்கே சென்றார் என்பதற்கான விடை கிடைத்திருக்கிறது.

மகளையும் பேரனையும் பார்க்க

மகளையும் பேரனையும் பார்க்க

தனது மகள் செளந்தர்யா மற்றும் பேரன் வேத் கிருஷ்ணாவை பார்க்கத் தான் நடிகர் ரஜினிகாந்த் நேற்று காரில் பறந்துள்ளார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், மகள் செளந்தர்யா மருமகன் விசாகன் மற்றும் பேரன் வேத் கிருஷ்ணாவுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படத்தையும் ரிலீஸ் செய்துள்ளனர்.

தலைவர்

தலைவர்

இந்த புகைப்படம் வெளியானதும், #Thalaivar என்ற ஹாஷ்டேக்கை இந்தியளவில் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர். படத்துல மட்டும் இல்லை நிஜத்துலயும் தலைவர் செம ஸ்டைலாத்தான் கார் ஓட்டுறாரு என்றும், அண்ணாத்த ஆட்டத்துக்கு ரெடியாகிட்டார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X