நம்மை போன்ற நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை-உருகும் ரஜினி

Recommended Video

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், தன்னுடைய அண்ணன் சத்யநாராயணராவை சந்தித்த ரஜினிகாந்த்-வீடியோ

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், தன்னுடைய அண்ணன் சத்யநாராயணராவை ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்த ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அண்ணன் சத்யநாராயண ராவ் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் கொண்டவர். காரணம் தன்னை சிறு வயதில் இருந்தே வளர்த்து ஆளாக்கியவர். என்ன தான் இந்தியாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக தான் இருந்தாலும், தன்னுடைய அண்ணனைக் கண்டால் பாசத்தில் உருகுவார்... அண்ணன் மீது அவ்வளவு மரியாதை.

Rajinikanth met Sathyanarayana Rao in Bangalore Hospital

என்னதான் படப்பிடிப்பு பிஸியாக நடந்து வந்தாலும், தனது சகோதரரை சந்திக்க கொஞ்சம் நேரம் ஒதுக்கியுள்ளார். சமீபத்தில், பெங்களூரு சென்ற ரஜினிகாந்த் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது அண்ணன் சத்யநாராயண ராவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பேட்ட. ரசிகர்களின் ஆரவார வரவேற்பைப் பெற்ற இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்புப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலாக நடித்து வருகிறார். மிகவும் பிஸியாக செயல்பட்டு கொண்டு இருக்கும் இந்த வேளையில் பல நெருக்கடிகள் வந்துகொண்டு தான் இருக்கிறது.

Rajinikanth met Sathyanarayana Rao in Bangalore Hospital

சூட்டிங் ஸ்பாட் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாவது தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் தர்பார் படத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில், ரஜினி போலீஸ் உடையில் இருப்பது போன்றும் அருகில் நயன்தாரா நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. பிஸியான நேரத்திலும் உடல் நலிவுற்ற அண்ணன் விரைவில் நலமடைய நேரில் சந்தித்து விசாரித்துள்ளார் ரஜினி.

சகோதரரை சந்தித்து நலம் விசாரித்த போது அருகிலிருந்த மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதில், ஒரு புகைப்படத்தில், ரஜினிகாந்த், அவரது சகோதரர் சத்யநாராயண ராவ், மருத்துவமனை ஊழியர்கள் என்று அனைவரும் கட்டைவிரலை உயர்த்தி காட்டுகின்றனர். இந்த ஃபோட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது ரஜினியின் சகோதரர் நலமுடன் இருப்பதைக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல ரசிகர்களும் வேண்டுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X