கேவி ஆனந்த் இழப்பு… அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது… ரஜினிகாந்த் வேதனை !
சென்னை: பிரபல தமிழ் திரையுலக இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
கடந்த 24ந் தேதி மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேவி ஆனந்த், இன்று அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 54 ஆகும்.

முன்னணி இயக்குனராக
பிரபல தமிழ்த் திரை இயக்குநரான கேவி ஆனந்த் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் ஆவார். இவர் இந்தி, தமிழ்,மலையாளம், தெலுங்கு என பல மொழிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தேசிய விருது
கடந்த 1995ஆம் ஆண்டு தேன்மாவின் கொம்பத்து என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் கேவி ஆனந்த் பெற்றார். இவர் கனா கண்டேன் திரைப்படம் மூலம் இயக்குநராகி அதன் பிறகு அயன், கோ, கவண், காப்பான், மாற்றான், அநேகன் எனப் பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார். தற்போது அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

உயிரிழந்தார்
இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கடந்த 24ந் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கே வி ஆனந்தின் மரண செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.
— Rajinikanth (rajinikanth) April 30, 2021
மிகுந்த வேதனை அளிக்கிறது
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











