சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த... அமெரிக்காவில் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் !
சென்னை : தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள அண்ணாத்த திரைப்படம் அமெரிக்காவில் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரஜினிகாந்த், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து பின்னணி கொண்ட கதையில் நடித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அண்ணாத்த
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் அண்ணாத்த இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

அண்ணன் தங்கை பாசம்
சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த திரைப்படம் தயாராகி உள்ளது. அண்ணன், தங்கை பாசம் இப்படத்தில் பிரதானமாக இடம்பிடித்துள்ளது. ரஜினி அண்ணனாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடித்துள்ளதாகவும் தெரிகிறது.
Recommended Video

பாடல்கள் ஹிட்
ரஜினிகாந்திற்காக எஸ்.பி.பி கடைசியாகப் பாடிய அண்ணாத்த...அண்ணாத்த... என்ற பாடல் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. அதேபோல, நயன்தாராவுடன் டூயட் பாடலான சார..சார காற்றே...மெலடி பாடலாக இருந்தது. சில தினங்களுக்கு முன்பு மருதாணி... என்ற பாடல் வெளியானது. ரஜினிகாந்த் தங்கையான கீர்த்தி சுரேஷுக்கு ஏதோ ஒரு விசேஷம் நடக்கும் போது இடம் பெறும் பாடல் எனத் தெரிகிறது.தற்போது வெளியாகி உள்ள 3 பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

அதிகமான தியேட்டர்களில்
அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டு இருப்பதால் அப்படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அண்ணாத்த படம் அமெரிக்காவில் சுமார் 50 தியேட்டர்களில் பிரீமியர் காட்சியாக நவம்பர் 3ந் தேதி ரிலிசாக உள்ளதாகவும், சுமார் 300க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகவரவேற்பு
இதற்கு முன் ரஜினி நடித்த தர்பார் கடந்த ஜனவரியில் வெளியானது. அந்த திரைப்படம் ரஜினியின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் படம் வெளியாக உள்ளதால், அண்ணாத்த படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











