பேக் டூ ஃபார்ம்மான ரஜினி.. அண்ணாத்த ஸ்பாட்டில் இருந்து வெளியான லேட்டஸ்ட் போட்டோ!
சென்னை: அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ரஜினியின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்தே. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.
பின்னர் கொரோனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக 2020 பிப்ரவரி மாதத்துடன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

கொரோனா
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லாக்டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் அப்போது படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வீட்டிலேயே ஓய்வு..
நடிகர் ரஜினிகாந்துக்கும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினிகாந்த் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார்.

கொல்கத்தாவில்..
இந்நிலையில் அண்மையில் மீண்டும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை மற்றும் ஹைத்ராபாத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் சில காட்சிகள் கொல்கத்தாவில் காட்சியாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப சப்ஜெக்ட்..
நடிகை நயன்தாரா தற்போது கொச்சியில் உள்ளார். இதனால் விரைவில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பார் என தெரிகிறது. இதேபோல் கீர்த்தி சுரேஷும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். அண்ணாத்த படம் பக்கா குடும்ப சப்ஜெக்ட்டாக இருக்கும் என தெரிகிறது.

லேட்டஸ்ட் போட்டோ
இந்நிலையில் தயாரிப்பாளர் சிறுத்தை சிவா, நடிகர் ரஜினிகாந்துடன் படப்பிடிப்பு தளத்தில் பேசிக் கொண்டிருக்கும் போட்டோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளது. இதில் வேட்டி சட்டையில் கலக்கலாக உள்ளார் ரஜினிகாந்த். அண்ணாத்த படத்தில் மீனா, குஷ்பு, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











