”பேட்ட” க்கு பிறகு முருகதாஸ் படமா?: அப்படின்னா எப்போ அரசியல்ல குதிப்பீங்க தலைவா?
ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது
Recommended Video

சென்னை: ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஷங்கரின் இயக்கத்தில் 2.0 திரைப்படம் நவம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலான நிலையில், பல புதுமையான விஷயங்கள் படத்தில் நிச்சயம் உள்ளது என்பதற்கான முன்னோட்டமாக அது அமைந்தது.

அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் "பேட்ட" படம் தயாராகி வருகிறது. சிம்ரன், த்ரிஷா, நவாசுதின் சித்திக்கி, பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி என கலர்ஃபுல் கலவையில் நடிகர் நடிகைகள் இருப்பதால் அதுவும் பக்கா மாஸ் படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ரஜினியை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போதைய அரசியல் சூழலை மையமாக வைத்து ஒரு கதை சொன்னதாகவும், அது ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரி்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேப் கிடைக்கும்போதெல்லாம் அரசியல் விஷயங்களை இழுக்கும் கமல்ஹாசன் போல், ரஜினிக்கு எதுவும் இல்லை. இல்லை என்று சொல்வதை விட, இப்போதைக்கு யாரையும் விமர்சிக்கக் கூடாது என்ற கொள்கையோடு இருக்கிறார். அதனால் 2019ம் ஆண்டு தேர்தலை சந்திப்பதற்கு முன்னர் இப்படத்தின் மூலம் அரசியல் நிலையை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தேர்தலில் குதிக்க திட்டமிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல் அதே ரூட்டில் பயணிக்கத்தான் இந்தியன் 2 படத்தில் நடிக்க போகிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.
எது எப்படியோ, அரசியலில் இறங்குகிறேன் எனச் சொன்ன ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலுக்குள் பட வேலைகளை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய்யின் சர்கார் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











